‘ஜம்புலிங்கம் 3D’ – படம் எப்படி ?

‘ஜம்புலிங்கம் 3D’ – படம் எப்படி ?

ஜப்பானில் வசித்து வரும் சுகன்யாவின் மகளை பணத்திற்காக ஒரு கும்பல் கடத்தி சென்றுவிடுகிறது. இதேவேளையில், தனது ஊருக்கு மேஜிக் செய்ய வரும் ஜேப்பியின் மேஜிக்கில் மயங்கி, அவரிடம் உதவியாளராக சேர்கிறார் கோகுல்நாத்.

இந்நிலையில் ஜேப்பி, ஜப்பானில் நடைபெறும் மேஜிக் நிகழ்ச்சிக்காக தனது குழுவில் உள்ள அஞ்சனா கீர்த்தி, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ் ஆகியோருடன் ஜப்பானுக்கு பயணமாகிறார். சென்ற இடத்தில் ஜேப்பிக்கு மாரடைப்பு ஏற்படவே, வேறு வழியின்றி கோகுல்நாத் அந்த மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

கோகுலின் மேஜிக் நிகழ்ச்சி அனைவருக்கும் பிடித்துப் போய்விடுகிறது. அதுமட்டுமில்லாமல் ஜப்பானில் மிகப்பெரிய தாதாவான ஒக்கிடாவுக்கு பிடித்துப்போக, கோகுலை வேறொரு மேஜிக் நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்கிறார். எனவே கோகுலும் அவரது குழுவும் ஜப்பானில் தங்குகிறது. இந்நிலையில், கோகுல்நாத்தின் குழுவை சேர்ந்த அனைவரும் ஜப்பானை சுற்றிப்பார்க்க செல்கிறார்கள். அப்போது கோகுல்நாத்தும், அஞ்சனா கீர்த்தி தங்களது குழுவை தவறவிடுகிறார்கள்.

அதேநேரத்தில், மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சுகன்யாவின் மகளை அந்த கும்பலிடமிருந்து மீட்கிறார் கோகுல். பின்னர், அந்த குழந்தையை சுகன்யாவிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார்.

இறுதியில், அந்த குழந்தையை கோகுல் சுகன்யாவிடம் ஒப்படைத்தாரா? தனது குழுவை தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

குழந்தைகளுக்கான படமாக இப்படத்தை எடுத்துள்ள இயக்குநர்கள் ஹரி – ஹரேஷ், 3டி தொழில்நுட்பத்தை தவிர்த்து, திரைக்கதையில் இன்னும் சற்று குழந்தைகளுக்கான விஷயத்தை சேர்த்திருக்கலாம்.

இசையில் பாடல்கள் சுமார் ரகம், ஆனால் பின்னணி இசையில் கவனம் பெறுகிறார். ஆங்கில 3டி படங்களுடன் ஒப்பிடாமல், தமிழில் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் 3டி படம் என்ற வகையில் இந்த பட முயற்சியை பாராட்டலாம்!

– Gowtham GA –

Share