
வெளியானது ‘பென்சில்’ திருட்டு வீடியோ, அதிர்ச்சியில் G.V. பிரகாஷ் குமார் போலீஸில் புகார்
G.V. பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான பென்சில் திரைப்படத்தின் திருட்டு வீடியோ இணையதளங்களில் வெளியானது. இத்திரைப்படம் கல்வி கொள்ளையை அம்பலப்படுத்துவதால் பொதுமக்களிடையே படம் பற்றிய நல்ல கருத்து நிலவியது. தேர்தல் முடிந்து 20ம் தேதி வாக்கில் இக்கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மக்கள் செவ்வாய் முதல் படம் பார்க்க வருவார்கள். இதனிடையே சனியன்று காலையே பென்சில் படத்தின் திருட்டு வீடியோ இணையதளங்களில் வெளியாது. அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உடனடியாக G.V.பிரகாஷ் உடன் கமிஷ்னர் அலுவலகம் வந்து முறைப்படி புகார் அளித்தனர். திரைத்துறையை அழிக்கும் இந்த திருட்டு வீடியோவை வேரோடு அழிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
Social