‘பென்சில்’ படம் எப்படி ?

‘பென்சில்’ படம் எப்படி ?

ஊருக்குள்ளேயே மிகப்பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ் டு படிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதே பள்ளியில் படிக்கும் கமிஷனர் மகள் ஸ்ரீதிவ்யாவை காதலிக்கிறார். ‘சூப்பர் ஸ்டார்’ விஜித்காந்த் மகன் ஷாரிக் அப்பாவின் பெயரை வைத்து பள்ளியில் லூட்டி அடிக்கிறார்,ஆரம்பத்தில் இருந்தே ஜீ,வி, பிரகாஷ் ஷாரிக் கோஷ்டிகளுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. முக்கியமாக ஜீ,வி, யின் ப்ராஜெக்டை ஷாரிக் எரித்துவிட சண்டை முற்றிவிடுகிறது.

ISO சர்டிபிக்கெட்காக ஊர்வசி தலைமையில் இன்ஸ்பெக்சன் நடக்க, வகுப்பில் நடக்கும் ஒரு அசம்பாவிதத்தில் ஜி.வி.பிரகாஷ் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவருடன் சேர்ந்து ஸ்ரீதிவ்யாவும் அந்த அசம்பாவிதத்தின் முடிச்சை அவிழ்ப்பதை த்ரில்லராகக் கொடுத்திருக்கிற படம் ‘பென்சில்’.

தாமதமாக வெளிவந்தாலும், ஜி.வி.பிரகாஷுக்கு இதுதான் நடிகராக முதல் படம். ஆரம்பத்தில் ஸ்ரீதிவ்யா உடனான ஒருதலைக் காதலாகட்டும், ஷாரிக் ஹாசனோடு முறைக்கும் இடத்திலும் வேறுபாடு காண்பித்திருக்கிறார்.

ஸ்ரீதிவ்யாவுக்கு, ஜீ.விக்கு இணையான கதாபாத்திரம். ஜீ. வீ. க்கு பல்பு கொடுக்கும் காட்சிகளில் நல்ல நடிப்பு. பணக்காரப் பையன் கதாபாத்திரத்துக்கு, ஷாரிக் ஹாசன் சரியான தேர்வு.  பள்ளி ஆசிரியர்களிடம் காட்டும் பணத்திமிரும், தெனாவெட்டும், பெண்களை மிரட்டி அழ வைக்கும் காட்சிகளிலும் சூப்பராக ஸ்கோர் செய்கிறார்.

ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், வி.டி.வி. கணேஷ் போன்ற சீனியர் நடிகர்களைக் கொண்டு கொஞ்சம் காமெடிக்கு முயற்சி செய்திருக்கிறார்கள்.

வசனங்கள் நச்.
உதாரணம் ”எதிர்பாராம நடந்தாதான்டா ஆக்சிடெண்ட். ஃபிக்ஸ் பண்ணி நடந்தா அது 20-20”, பாடல்கள் வெளியாகி வெகுநாட்கள் ஆனதால் எதுவுமே நினைவில் நிற்கவில்லை. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு அழகு. ஆண்டனியின் படத்தொகுப்பு ப்ளஸ்.

ஆசிரியர்களுக்குள் லவ், பள்ளிகளுக்கிடையேயான பிஸினஸ் போட்டி என்று ஒரு தனியார் பள்ளிக்குள் இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்ட விஷயங்களை படத்தில் சேர்த்திருப்பது மட்டும் ஸ்பெஷல்.

 

Gowtham GA

Share