மனிதன் – படம் எப்படி ?

மனிதன் – படம் எப்படி ?

பொள்ளாச்சியில் வக்கீல் பணிபுரியும் உதயநிதிக்கு சரியாக வாடாத தெரியாமல் தனக்கு வரும் அனைத்து வழக்குகளிலும் தோற்பதால், தான் காதலிக்கும் மாமா மகள் ஹன்சிகாவின் வீட்டிலும் கேலியும் கிண்டலுமே மிஞ்சுகிறது. இதனால் கோபமுறும் ஹன்சிகா ‘நீ வக்கீல் தொழிலுக்கு சரிப்பட மாட்டே” என சண்டை போட்டுவிட, ஒரு வழக்காவது ஜெயித்து விட்டு தான் திரும்பி வரணும் என்ற முடிவோடு சென்னையில் உள்ள தனது வக்கீல் மாமா விவேக் வீட்டிற்கு கிளம்புகிறார். ஆனால் விவேக்கோ நீதிமன்றத்தில் ஊறுகாய் விற்கும் அளவுக்கு தத்தியாக இருக்கிறார்.
பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த மக்களின் மேல் காரை ஏத்தி கொன்று விட்ட பணக்கார பையனை, பிரபல வக்கீலான பிரகாஷ்ராஜ் தன் வாத திறைமையால் காப்பாற்றுகிறார்.
தன்னை நம்பி யாருமே வழக்கை தராததால் இதனை பொதுநல வழக்காக எடுத்து மேல் முறையீடு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்கிறார் உதயநிதி. பின்னர் இவர் அந்த வழக்கில் எப்படி  ஜெயிக்கிறார் என்பதே படம்.
முன்னணி வக்கீலான பிரகாஷ்ராஜை சமாளிக்க முடியாமல் திணரும் காட்சிகளிலும் அவர் விட்ட சிறு துறும்பை பெரிதாக்கும் இடங்களில் உதயநிதி அப்ளாஸ் அள்ளுக்கிறார். இதுவரை மசாலா படங்களிலேயே நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் இது போன்ற படங்களை தேர்ந்தெடுத்திருப்பது பாரட்டத்தக்கது. பிரகாஷ்ராஜ் நடிப்பின் உச்சம் என்று தெரிந்தும், படத்தில் அவருடன் மோத முடிவெடுத்த அந்த துணிச்சலுக்காகவே பாராட்டுக்கள்.
நீதிபதியாக ராதாரவி நடித்திருப்பது படத்திற்கு பலமே. அந்த கேரக்டரை தன்னை தவிர வேறு யாராலும் சிறப்பாக செய்திருக்க முடியாது. பிசாசு படத்திற்கு பிறகு, ராதாரவிக்கு கைத்தட்டுகளை அள்ளிக் கொடுத்திருக்கிற படம் இது. முக்கியமாக ராதாரவியும் பிரகாஷ்ராஜும் வாதிடும் இடம். ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி நிருபராக தனக்கான வேலையை செய்திருக்கிறார். விவேக் நகைச்சுவை நடிகராக மட்டுமே இல்லாமல் குணசித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். பாடல்கள் ஓகே ரகம்.
பாடலும் காதலும் தேவை என்பதால் ஹன்சிகாவும் படத்தில் இருக்கிறார். ஒளிப்பதிவாளர் மதியின் ஒளிப்பதிவில் மேலும் மெருகேறியிருக்கிறார் ஹன்சிகா
படத்தில் சாட்சியாக வரும் அந்த ஏழைகளின் நடிப்பில் இருக்கும் தத்ரூபம் மூலம் மனதில் நிற்கிறார் இயக்குனர்.
அஜயன் பாலாவின் வசனங்கள் பல இடங்களில் நறுக்.
உதாரணம் : ”ப்ளாட்பாரம் ஒன்னும் பெட்ரூம் இல்ல”ன்னு பிரகாஷ்ராஜ் சொல்லும் போது, “அப்போ பிளார்பாரத்துல வண்டி ஓட்டலாமா”ன்னு உதயநிதி கேட்கும் இடம்.
பொதுவாகவே இதுபோன்ற நீதிமன்ற கதைகளை பின்னணியாக கொண்ட படங்களில், பக்கம் பக்கமாக வசனம் பேசுகிற வழக்கத்தை முதன்முறையாக மாற்றியுள்ளார் அஜயன் பாலா.
தமிழில் இதுபோன்ற படங்கள் மிக அரிதாக வருவதால் கண்டிப்பாக ஒரு நல்ல ஓப்பனிங் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பணம் இருந்தால் எவரும் எளிதில் தப்பிக்கலாம் என்னும் அளவுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் காவல்துறையும் எந்த அளவு தரமற்று போயிருக்கிறது என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.
மொத்தத்தில் மனிதன் குடும்பத்துடன் பார்க்க சிறந்த படம்.. மனிதன்.
After Vidhi, Manithan movie is very good film, must watch with family | Public Verdict | Udhayanidhi Stalin
watch our video review:
https://www.youtube.com/watch?v=JPtBQw7bJDc
Share