களம் – படம் எப்படி?

களம் – படம் எப்படி?

மதுசூதனன் எல்லாரையும் மிரட்டி அவர்களது சொத்துக்களை அபகரிக்கும் ஒரு லோக்கல் தாதா. தன் மகன் அம்ஜத்துக்காக ஒரு பாழடைந்த மாளிகையை வாங்குகிறார். அதன் பின்னர் தன் மனைவி லட்சுமி ப்ரியாவுடன் அம்ஜத் அந்த வீட்டில் குடியேற அந்த வீட்டினுள் அமானுஷ்யமான விஷயங்களை சந்திக்கிறார்கள் பிறகு எப்படி அதிலிருந்து மீண்டுவந்தார்கள் என்பதுதான் கதை.

அறிமுக காட்சியிலே மதுசூதனன் அசத்தலாக வருகிறார். லட்சுமி ப்ரியா தன் கண்களில் பயத்தை அருமையாக உணர்த்தியுள்ளார். குறுகிய நேரமே வந்து போகிறார் நாசர். சமீப காலங்களில் காமெடி சீன்களே இல்லாத பேய் படம்.

டெக்னிக்கலாக படம் அனைவரையும் கவர்ந்து இழுக்கின்றது. இந்த படத்தின் மிக முக்கியமான அம்சம் கலை இயக்குனரின் கைவண்ணம். முகேஷின் அழகான ஒளிப்பதிவு பேய் மாளிகையும் ப்ளாஷ் பேக் காட்சிகளும் கண்களும் விருந்து.

படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட். பேய் படம் போல் முழுபடத்தையும் கொடுத்து, க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுத்திப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

மொத்தத்தில் ஒரு முறை களத்தில் குதிக்கலாம்…

Share