“Gangnam Blues” Korean Movie Trailer – Lee Min-Ho

“Gangnam Blues” Korean Movie Trailer With Eng Subtitle

நீங்கள் கொரியன் படங்களின் தீவிர ரசிகரா? அப்போ உங்களுக்கு லீமின் ஹோ (Lee Min-Ho)வை கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

Lee_Min-Ho
லீமின் நடித்தது என்னமோ மூன்று படங்கள் தான். ஆனால் கொரிய தீபகற்பம், ஜப்பான், இந்தோனேசியா, சீனா நாடுகளில் வாழும் இளம் பெண்களின் கனவு நாயகன் லீமின் ஹோ தான். 20 பகுதி கொண்ட தொடர் அவர் நடித்த City Hunter 2011 வெளியாகியது (அது தொடர் அன்று 20 சினிமாவுக்கு சமம், கொரியாவில் தொலைக்காட்சியும் மற்றும் சினிமாவும் ஒரே இன்டஸ்ரி தான், இரண்டிலும் கலந்து நடிப்பார்கள்.) லீயை உச்சத்தில் ஏற்றிவைத்தது. தொடர்ந்து 2012 Faith என்னும் தொடரும் அதனை தொடர்ந்து 2013 ல் வெளியான The Heirs தொடரும் இனி யாரும் 5 வருடத்திற்க்கு லீயை தொடாத அளவுக்கு ரசிகர்களின் மனதில் குறிப்பாக ரசிகைகளின் மனதில் குடியேறிவிட்டார்.
அவர் தொடர்களுக்கு சிறிய இடைவெளிவிட்டு இந்த வருடம் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் அந்த படம் தான் “Gangnam Blues” இந்த மாதம் 21ம் தேதி வெளிவரவுள்ள இந்த படத்தை கொண்டாட கொரியாவே தயாரா இருக்கிறது. (டிஸ்கி: Gangnam என்பது தென் கொரியா தலைநகர் சியோலில் இருக்கும் ஒரு ஊர். மிகப்பெரிய பணக்காரர்கள் தான் இந்த பகுதியில் வசிக்க இயலும். அப்புறம் அது கங்கம் கிடையாது அதை கன்னம் என்று தான் அழைக்க வேண்டும்) “Gangnam Blues” கொரியன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை காணுங்கள். (Eng Subtitle இருக்குதுங்க).

Share