Vengeance of an Assassin (2014, Thailand Film)
தாய்லாந்து அதிரடி சண்டைக்காட்சிகளின் மிகப்பெரிய இயக்குனர் திரு. பன்னா ரிட்டீராய் (Panna Rittirai) அவர்கள் இயக்கிய கடைசிப்படம் “வெஞ்சன்ஸ் ஆப் அன் அசாசின்” (Vengeance of an Assassin) 13 நவம்பர் 2014ல் வெளியாகியது. இயக்குனர் பன்னா ரிட்டீராய் (Panna Rittirai) அவர்கள் தாய்லாந்து நாட்டில் பல இயக்குனர்கள், நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக அவரின் பிரதான சீடன் நாம் அறிந்த அதிரடி நாயகன் தோனி ஜா Tony Jaa ஆவார். 15வயதில் பன்னாவிடம் சேர்ந்த ஜா படிப்படியாக அனைத்து வகையான தற்காப்பு கலைகளையும் கற்றுத்தேர்ந்தார். பன்னா 2003ல் இயக்கிய ஆங் -பாக் (1/2/3 தொடர் படங்கள்) (aka. கும்கி வீரன்) (Ong-Bak) டாப்ஸ்டார் ஆனார்.
பன்னா இயக்கிய திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் தத்ரூபமாகவும் அதே சமயம் இயற்கையாகவும் அமையும்படி பார்த்துக்கொள்வார். Vengeance of an Assassin திரைப்படத்தின் டிரைலரை காணுங்கள் நான் சொல்வது சரியன தோனும். ஜா இந்தப்படத்தில் நடிக்கவில்லை.
Social