காத்திருப்போர் பட்டியல் (2018) – படம் எப்படி ?

காத்திருப்போர் பட்டியல் (2018) – படம் எப்படி ?

இயக்கம் :  பாலைய்யா.D.ராஜசேகர்

நடிப்பு : சச்சின் மணி
நந்திதா
சென்றாயன்
மயிலசாமி
அருள் தாஸ்
மனோபாலா

ஒளிப்பதிவு : M.சுகுமார்

படத்தொகுப்பு : ரூபன்

இசை : ஷான் ரோல்டன்

தயாரிப்பு : பைஜா டாம்

நீளம் : 113 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் :

தன் காதலி மேகலா’வின் (மதுமிதா) திருமணத்தை நிறுத்த அவசரமாக புதுச்சேரி விரையும் நாயகன் சத்யா (சச்சின் மணி), ரயில் பெட்டியில் பெயர் எழுதி சேதப்படுத்திய குற்றத்திற்காக ரயில்வே காவல்துறையிடம் சிக்கிக்கொள்ள, அவரும், அவருடன் போலீசில் சிக்கிக்கொண்ட சிலரும் சேர்ந்து போலீஸிடமிருந்து தப்பிக்க முயலுகின்றனர், பின்னர் நிகழும் சம்பவங்களே திரைக்கதை.

 

பலம் …

+ இசை : தேமே என போகும் திரைக்கதையில் ஷான் ரோல்டன்’னின் பாடல்களும், ஆங்காகே பளிச்சிடும் பின்னணி இசையும் நம்மை நிமிர வைக்கிறது

+ ஒளிப்பதிவு : சுகுமாரின் ஒளிப்பதிவில் பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் பளீர். சிறை அரை மற்றும் அதை சார்ந்த காட்சிகள் ‘டல்’ அடிக்கிறது.

 

பலவீனம் …

– திரைக்கதை : ஒரு நோக்கமே இல்லாமல் செல்லும் திரைக்கதை, நம்மை எளிதில் தொய்வடைய வைக்கிறது. இது காதல் படமா? இல்லை காவல் துறை சார்ந்த படமா? என்ற வினாவுக்கு விடை ‘கடல்லயே இல்லையாம்’.

– கதாபாத்திரங்கள் : படத்தில் ஏகப்பட்ட காமெடி நடிகர் கூட்டம் கொட்டிகிடடந்தாலும், காமெடி மட்டும் இறுதிவரை வரவில்லை. ஹீரோ ஹீரோயின் உட்பட அணைத்து கதாபாத்திரங்களும் ‘வீக்’.

‘விஜய்சேதுபதியின் பின்னணி குரலில் ஒரு ரயில்வே போலீஸ் பற்றிய கதை’, என்று சற்று நிமிர்ந்து உட்காரும் ரசிகர்களை, சிறிது நேரத்திலேயே உறங்க வைத்து விடுகிறது திரைக்கதை. எல்லா காவல் துறையைப்போல, ரயில்வே காவலையும் உயர்த்தி பிடிக்கவேண்டும் என்கிற இயக்குனரின் எண்ணம் நமக்கு வெளிப்பட்டாலும், அதை அவர் சித்தரித்த விதம் தான் ஜீரணிக்க முடியவில்லை.

‘சரி, காதல் கட்சிகளாவது, தேறுமா?’. என்று எதிர்பார்த்தால், ‘நானும் சளைத்தவன் இல்லை’ என்கிற அளவிற்கு மல்லுக்கட்டி நம்மை துவைத்து எடுத்தது தான் மிச்சம். நந்திதா போன்ற ஒரு திறன் வாய்ந்த நடிகர்களை ஒன்று திரட்டி, வேண்டுமென்றே Time pass செய்திருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். அதுவும், இந்த கிளைமாக்ஸின் நோக்கத்தை புரிந்துகொள்ள தனி மூளையைக்கொடு இறைவா!!…

மொத்தத்தில் : எந்த ஒரு பாதையிலும் தெளிவற்ற பாதையில் செல்லும் இந்த ‘காத்திருப்போர் பட்டியல்’, ரசிகர்களை எளிதில் சலிக்கவைத்து விடுகிறது. அதையும் மீறி கடைசி வரை காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மதிப்பீடு : 1.75 / 5 …

Share