நடிகையர் திலகம் – படம் எப்படி?

நடிகையர் திலகம் – படம் எப்படி?

இயக்கம் : நாக் அஸ்வின்
நடிப்பு :

கீர்த்தி சுரேஷ்,
துல்கர் சல்மான்,
சமந்தா அக்கினேனி,
விஜய் தேவர்கொண்டா,
ராஜேந்திர பிரசாத்,
பானுப்ரியா,
நாக சைத்தன்யா,

ஒளிப்பதிவு : தானி சஞ்செஸ் – லோபேஸ்
படத்தொகுப்பு : கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
இசை : மிக்கேய்.ஜே.மேயர்
தயாரிப்பு : வைஜந்தி மூவிஸ்
ஸ்வப்னா சினிமாஸ்
நீளம் : 171 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் :

‘நடிகையர் திலகம்’ சாவித்ரியின் (கீர்த்தி) வாழ்க்கைவரலாற்றை கட்டுரையாக வடிவமைக்கும் பொறுப்பை கொண்ட பத்திரிக்கையாளர் மதுரவாணி (சமந்தா), தன் புகைப்பட கலைஞர் ஆன்டனி (விஜய்) உதவியோடு,தன் கட்டுரையின் வழியே சாவித்ரியின் வாழ்க்கையை வெளிஉலகிற்கு சொல்லும் கதை.

 

பலம் . . .

+ நடிகர்கள் தேர்வு : தொடக்கம் முதல் இறுதி வரை வரும் சிறு சிறு கதாபாத்திரம் கூட அழகாக வடிவமைக்க பட்டிருந்ததுடன் தேர்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு. ராஜேந்திர பிரசாத், மோகன் பாபு, பிரகாஷ் ராஜ் போன்ற சீனியர் நடிகர்கள் பட்டையை கிளப்பி இருப்பதே படத்தின் ஆஜானுபாக பலம்.

+ கீர்த்தி சுரேஷ் & துல்கர் சல்மான் : இருவரும் சாவித்ரி – கணேசன்’ஆகவே வாழ்ந்திருப்பது திரையில் தெரிகிறது. கீர்த்தியின் குறும்புக்கார முகபாவனைகள் ஒரு புறம், இரண்டாம்பாதியில் தேர்ந்த நடிப்பு மறுபுறம் என்று, சாவித்ரி அம்மாவை கண் முன்னே நிறுத்துகிறார். மறுமுனையில் , காதல்மன்னனை நேரில் கண்ட பூரிப்பை தருகிறார் துல்கர்.

+ ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : நிகழ்கால 80’ஸ் சம்பவங்களை மங்கலான ஈஸ்ட்மென்ட் கலர் பாணியிலும், பிளாஷ்பேக் காட்சிகளை ஹெலிவாக படம் பிடிப்பதில் துவங்கி ஒளிபபதிவில் பல்வேறு நுணுக்கங்களை கையாண்டு இருக்கிறார்கள், தானி சஞ்செஸ் – லோபேஸ். திரைக்கதை அமைப்பிற்கேர்த்த வெட்டுகளை தந்ததுடன், அவ்வப்போது Non-Liner எடிட்டிங்கில் சிறப்பாக பங்காளித்துளார் வெங்கடேஸ்வர ராவ்.

+ திரைக்கதை நுணுக்கங்கள் & நுட்பங்கள் : 50’களில் துவங்கி 80’கள் வரை நகரும் திரைக்கதையில், தேவையான அளவு கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தாலும், உபயோகிக்கப்பட்ட set Properties ஒவ்வொன்றிலும் அவ்வளவு கலை நுட்பங்கள், போதாததற்கு, ஒவ்வொரு காட்சியையும் மெல்ல விவரித்து ‘போதும்’ என்ற அளவுக்கு திரைக்கதை நுணுக்கங்களிலும் கவனம் செலுத்தி அசத்துகிறார் இயக்குனர்.

பலவீனம் ….

– காதல் காட்சிகள் : சமந்தா-விஜய் தேவர்கொண்டா இடையிலான காதல்காட்சிகள் அனைத்தும் தேவையான அழுத்தமில்லாமல், செயற்கையாக தேங்கி நிற்க்கிறது.

– மெதுவான திரைக்கதை : மெதுவாக செல்லும் திரைக்கதை, முதல்பாதியில் ஓகே என்றாலும், இரண்டாம்பாதியின் இறுதி காட்சிகளில் ரசிகர்களை தொய்வடையச்செய்யும் தொனியில் செல்வதை சிறிது தவிர்த்திருக்கலாம்.

படத்தின் மேலுமொரு அம்சம், வசனங்கள். டப்பிங் படமென்றாலும், படத்தின் சாராம்சம் போகாதவண்ணம் கால்வாசி வசனங்களை தெலுங்கில் தக்கவைத்து சிறப்பு, மதன் கார்க்கியின் தமிழ் வசனங்கள் அதனினும் சிறப்பு. கீர்த்தியின் அறிமுக காட்சி துவங்கி பல காட்சிகள் புல்லரிக்கும் ரகம், முழு ஈடுபாட்டுடன், மூன்று வருடங்கள் தவம் கொண்டு இப்படத்தை நமக்கு கொண்டுசேர்த்த இயக்குனர் நாக் அஸ்வின், பல்வேறு விருதுகளுக்கு தகுதி உடையவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

மொத்தத்தில் : நடிகையர் திலகத்தை வெறும் நடிகையாக மட்டுமே பார்ப்பவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

மதிப்பீடு : 4/5 …

Share