தியா (2018) – படம் எப்படி?

தியா (2018) – படம் எப்படி?

இயக்கம் : AL.விஜய்
நடிப்பு : சாய் பல்லவி
பேபி வெரோனிகா
நாக ஷவுர்யா
RJபாலாஜி
நிழல்கள் ரவி
ரேகா
சந்தான பாரதி
ஒளிப்பதிவு : நிரவ் ஷா
படத்தொகுப்பு : ஆன்டனி
இசை : சாம்.C.S.
தயாரிப்பு : LYCA productions
நீளம் : 100 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் :

சிறுவயதில் தாய்மை அடைந்ததால் கலைக்கப்பட்ட ஒரு கரு, கலைக்கப்பட்டதற்கு நீதி கேட்டு தன் உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்கிறது, இதன் இறுதியில் நடக்கும் சம்பவங்களே ‘தியா’ வின் மூலக்கரு.

 

பலம் …

+ இசை : ஆரம்ப டைட்டில் பாடல் துவங்கி, படத்தின் பல இடங்களில் சாம்.C.S’ஸின் இசை மேலோங்கி ஒலிக்கிறது. படத்தில் உபயோகிக்கப்பட்ட அனைத்து சப்தங்களும், நம் உணர்வுகளை எழுப்பும் வண்ணம் அமைந்திருப்பது படத்தின் கூடுதல் பலம். பல இடங்களில் ஒலி வடிவமைப்பு, கச்சிதம்.

+ ஒளிப்பதிவு : நிரவ்ஷா’வின் கைவண்ணத்தில், படத்தின் ஒவ்வொரு Frame’மும் கூடுதல் பொலிவு தென்படுகிறது. Interior கட்சிகளின் கலை வடிவமைப்பும், காட்சிப்பிரிவும் நன்று. கார் விபத்து காட்சியில் வரும் Rotating angle, ஆச்சரியம்.

+ நடிப்பு : இளமையான கதாபாத்திரங்களிலேயே பார்த்துப்பழகிய சாய்பல்லவி, இப்படத்தில் பக்குவமான நடிப்பை தந்திருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பின் மூலம் மிரட்டி இருக்கிறார் பேபி வெரோனிகா. நாக ஷவுர்யா, அமைதியாக வந்து போகிறார்.

 

பலவீனம் . . .

– திரைக்கதை : படத்தின் மூல முடிச்சுக்கள் முதலிலேயே அவிழ்க்கப்படுவதால், ரசிகர்கள் எதிர்பார்ப்பை எவ்விதத்திலும் தூண்டாத இப்படத்தின் மெதுவான திரைக்கதை, படத்தின் முதல் பலவீனம்.

– படத்தொகுப்பு : காட்சிக்கு காட்சி இடையில் நறுக்கப்படும் Frame இடைவேளை அதிகமாகி போவதால், வழக்கத்திற்கு மாறாக காட்சிகள் நீண்டு காணப்படுகிறது. இதனால், படத்தின் ஓட்ட நேரம் குறைவாக இருந்தாலும், ஒரு நீளமான படத்தை பார்த்த அயர்த்தியை இப்படம் கொடுக்கிறது.

ஆர்வமில்லாத போலீஸ் அதிகாரியாக RJபாலாஜி, படத்தின் நீளத்திற்கு மட்டுமே உதவுகிறார். இறுதியில் அவர் திருந்தும் காட்சி நன்று. நிழல்கள் ரவி, ரேகா, சந்தான பாரதி ஆகியோர் வந்து சென்றிருக்கிறார்கள். இடையில் ஏற்படும் சுவாரசியமான முடிச்சுக்களை அவ்வப்போதே அவிழ்க்கப்படுவதால், திரைக்கதையில் ரசிகர்களுக்கு பிடிப்பு இல்லாமல் போகிறது. இருப்பினும், இறுதி காட்சிகளில் வரும் செண்டிமெண்டல் டச், நன்று.

மொத்தத்தில் : ஒரு horror படத்திற்கு, ஆர்ப்பாட்டமில்லாத, தெளிந்த நீரோடையாக இருக்கும் இப்படத்தின் திரைக்கதை, நமக்கு அயர்த்தியை கொடுத்தாலும், படத்தின் ‘கரு’விற்காக ஒருமுறை பார்க்கலாம்.

மதிப்பீடு : 3.25 / 5 . . .

Santhosh AVK

Share