நெருப்புடா – படம் எப்படி ?

நெருப்புடா – படம் எப்படி ?

இயக்கம் : அசோக் குமார்

நடிப்பு : விக்ரம் பிரபு

நிக்கி கல்ராணி

மதுசூதன ராவ்

‘நான் கடவுள்’ ராஜேந்திரன்

நாகிநீடு

‘ஆடுகளம்’ நரேன்

வின்சென்ட் அசோகன்

சங்கீதா

ஒளிப்பதிவு : R.D.ராஜசேகர்

படத்தொகுப்பு : தியாகு

இசை : சான் ரோல்டன்

கலை : பிரபாகரன்

தயாரிப்பு : விக்ரம் பிரபு

இசக்கி துரை

R.K. அஜய் குமார்.

 

‘உயிர கொடுக்குற தொழில் செய்யுற ஒருத்தன், உயிரை எடுக்க மாட்டான்’, என்கிறது நெருப்புடா. அதை யாருக்காக, எதை மைய்யப்படுத்தி கூறும் வசனம் என விவரிப்பதே திரைக்கதை. சில சமயம் தேவையான வசனமாகவே புலப்பட்டாலும், பல இடங்களில் தேவையற்ற திணிப்பாகவே தோன்றியிருப்பது தான் பலவீனம்.

 

கதைச்சுருக்கம் : தீயணைப்பு தொழிலை நேசிக்கும் குருவும், அவர்களது நண்பர்களும், தீயணைப்பு துறையில் வேலை கிட்டும்கி முன்னரே, அதை சேவையாக செய்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்கும் தருவாயில், இடையில் தவறுதலாக நடக்கும் ஒரு சம்பவத்தால், இவர்களது வாழ்க்கையே திசைமாறுகிறது. பின்னர் நடக்கும் நிகழ்வுகளே திரைக்கதை.

 

வழக்கமான கமர்சியல் சம்பிரதாயங்களுடன் தொடங்கும் கதை, முதல் 30 நிமிடத்துக்குள் சூடுபிடிக்க துவங்க, இடைவேளைவரை சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. புதுமையான கதைக்களத்துடன் போகிற இக்கதையை, பழமை ஓங்கிய இரண்டாம்பாதி பெரிதும் பாதிக்க, தடாலடி திடீர் கிளைமாக்ஸும் சுவையில்லாமல் போக, சூடுபிடிப்பதற்குள் அடுப்பிலிருந்து இறக்கிவைத்து பாத்திரமாகிறது இந்த ‘நெருப்புடா’.

 

பலம் . . .

 

+ தீயணைப்பு காட்சிகள் : முதல் பாதி தீயணைப்பு காட்சிகளின் ததும்பும் தத்ரூபத்திற்கு பாராட்டுக்கள். தீ எங்கிருந்து உருவாகிறது என்கிற நுணுக்கங்கள், எழுத்திலே பலமாக இருப்பதை உணரமுடிகிறது. ஒளிப்பதிவும், ஒளிஅமைப்பும் இதற்க்கு பக்கபலம் எனலாம்.

 

+ கலை : அரங்க அமைப்புகளில் மட்டுமில்லாமல், ஹீரோ முகப்பு பாடலில், பின்னணியில் எறிந்த நிலையில் காணும் வாகனங்களில் கூட கலை இயக்குனர் பிரபாகரனின் உழைப்பு மிளிர்கிறது. மைதானத்திற்கு நடுவே நிற்கும் கலங்கரை விளக்கத்தின் வேலைப்பாடுகள் நன்று.

 

+ முதல்பாதி : நட்பு, காதல், விபத்து, கடத்தல், என பல கோணங்களில் பயணித்தாலும், சீராகவே செல்கிறது முதல்பாதி. ஆக்ஷன் கதை தான் என்றாலும், ஒரு நல்ல #Dark காமெடி படத்திற்கான எல்லா அம்சங்களும் காணப்பட்டது.

பலவீனம் . . .

 

– காதல் காட்சிகள் : கோவிலில் ஹீரோயின் தோன்றும் முதல் காட்சி தவிர, அடுத்து வரும் அணைத்து காதல் காட்சிகளும், படத்திற்கு இடையூரே. நடுவே வரும் டூயட், எதற்கு என்பதே விளங்கவில்லை.

 

– இரண்டாம்பாதி & கிளைமாக்ஸ் – முதல்பாதியை ஏற்படுத்தும் அணைத்து நம்பிக்கைகளையும் தவிடுபொடி ஆக்குகிறது இரண்டாம்பாதி. கிளைமாக்ஸ் காட்சிகள், அதிர்ச்சியை காட்டிலும் எரிச்சலையே வரவைக்கின்றது.

 

– இசை : பாடல்கள் பெரிதாக கவரவில்லை, சான் ரோல்டனின் பின்னணி இசை நமக்கு எந்த வித பாதிபையையும் ஏற்படுத்தவில்லை. ஹீரோ, தனது அப்பா இறந்த சடலத்தை காணும் காட்சியில், பின்னணி இசை சோக ஒளிக்காமல் மேலோட்டமாக இருந்ததால், பின்னர் வரும் காட்சியின் அழுத்தத்தை குறைகிறது.

 

விக்ரம் பிரபுவின் தந்தையாக வரும் பொன்வண்ணனின் நடிப்பும், இவர்களிடத்தில் காணும் அந்நியோன்யமும் நன்று. மண்டல அதிகாரியாக வரும் நாகிநீடு, அவ்வப்போது தலைகாட்டி, ஹீரோவிற்கு ஊக்கம் கொடுக்கிறார். படத்தில் போலீசிற்கு வேலையில்லாததால், ‘ஆடுகளம்’ நரேன் கதாபாத்திரம் எளிதில் நமுத்து போய் விடுகிறது. கவுரவ தோற்றாலத்தில் வின்சென்ட் அசோகன். மொட்டை ராஜேந்திரன் பல இடங்களில் சோதிக்கிறார். வசுமதியாக வரும் நிக்கி கல்ராணியின் கதாபாத்திரம் நன்றாக இருந்தாலும், சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் வலுவிழக்கிறது. மதுசூதன ராவ், மிரட்டிவிட்டு மறைகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் சங்கீதா கதாபாத்திரம், வீண் திணிப்பாகவே தென்படுகிறது.  வழக்கத்திற்கு மாறாக அதிக சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார் விக்ரம்பிரபு, பாராட்டுக்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் ஒளிப்பதிவில், தீயணைப்பு காட்சிகள் நன்று. எந்த ஒரு சஸ்பென்ஸும் 2 கட்சிகளுக்கு மேல் தங்காததால் திரைக்கதையில் ஒரு பிடிப்பில்லாமல் போகிறது, படத்தொகுப்பாளர் தியாகு இதை கவனித்து இருக்கலாம்.

வில்லனின் கடத்தல் நாடகம் வரை, நேர்மறையாகவும், நகைச்சுவையாகவும் செல்லும் திரைக்கதையை இயக்குனர் அசோக் குமார், வலுக்கட்டாயமாக ஆக்ஷன் பாதைக்கு கொண்டு  சென்றது ஏனென்று விளங்கவில்லை. இடைவேளைக்கு பின் வரும் காட்சியே கிளைமாக்ஸ் போல் தென்படுவதால், பின்னர் வரும் காட்சிகள் வெறும் சம்பிரதாயமே.

திருநங்கைகளை கவுரவப்படுத்துவதாகவும், திடீர்திருப்பதை ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி இறுதியில் பயனில்லாத வகையில் அமைந்திருப்பது துரதிஷ்டவசம்.

 

மொத்தத்தில் : திசைமாறிய இரண்டாம்பாதி, திணிக்கப்பட்ட காதல் காட்சிகள், திணிக்கப்பட்ட கிளைமாக்ஸ், இவற்றையெல்லாம் கண்டுகொலாமல் பார்த்தால், ‘நெருப்புடா’ ஒரு கண்ணியமான முயற்சியே.

RATING : 2.25 / 5 . . .

 

AVK Santhosh

Share