கதாநாயகன் – படம் எப்படி ?

கதாநாயகன் – படம் எப்படி ?

இயக்கம் : த.முருகானந்தம்

நடிப்பு : விஷ்ணு விஷால்

கேத்தரின் தெரசா

சூரி

ஆனந்தராஜ்

அருள் தாஸ்

சூப்பர் சுப்புராயன்

சரண்யா பொன்வண்ணன்

ஒளிப்பதிவு : லக்ஷ்மன்

இசை : சீன் ரோல்டன்

படத்தொகுப்பு : ஸ்ரீதரன்

தயாரிப்பு : விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்.

 

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ கொடுத்த தெம்பை நம்பி, B&C சென்டர்களுக்கான விஷ்ணுவிஷாலின் அடுத்த காமெடிப்படம். இந்த முறை அதீத நம்பிக்கையில் இறங்கிவிட்டார் என்றே சொல்லலாம்.

 

கதைச்சுருக்கம் : அரசுவேலையில் இருக்கும் தம்பிதுரை (விஷ்ணு), சிறிது பயந்தசுபாவம் கொண்டவர், அதே காரணத்தால் தான் காதலித்த பெண்ணின் தந்தை அவனை நிராகரிக்கிறார். இடையில் ஒரு ரவுடி கும்பலிடம் போதையில் தகராறு வேறு. இவற்றிலிருந்து எப்படி தப்புகிறார் என்று மிகவும் தடுமாற்றத்துடன் கூறியிருக்கிறது திரைக்கதை.

 

சுமாரான முதல் பாதியையும், இழுவையான இரண்டாம்பா தியையும் கொண்ட இப்படத்தின் முக்கிய பிரச்சனையே காமெடி காட்சிகள் தான். சில இடங்களில் நேரடியாகவும், பல இடங்களில் மறைவாகவும் திணிக்கப்பட்டிருக்கும் வேற்று பட காட்சிகளும் அம்சங்களும், ரசிகர்களை ரசிக்கவிடாமல் தடையாய் இருப்பதோடு, Spoof எனப்படும் கேலி கிண்டல் வகை படமாகவே நினைக்க தூண்டுகிறது.

 

பலம் . . .

 

+ ஒளிப்பதிவு : போஸ்டருக்கு சிறிதும் சளைக்காமல் படம் நெடுக கலர் விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன். செயற்கை சூரியஒளிக்காக உபயோகித்திருக்கும் stand Light ஆங்காகே கண்ணை உறுத்துகிறது.

 

+ இசை : பாடல்கள் சுமாராக இருந்தாலும், பின்னணி இசையில் காட்சிகளை சுவாரசியமாக்க பாடுபட்டிருக்கிறார் சீன் ரோல்டன். Lag அடிக்கும் இடங்களைக்கூட இசையால் நிரப்பி முயற்சித்திருக்கிறார்.

 

+ மொட்டை ராஜேந்திரன் : சென்சார் certificate’டில் எட்டிப்பார்க்கும் ராஜேந்திரன், கிளைமாக்ஸில் தான் திரையில் உதிக்கிறார். அவர் பாடும் பாடல்களும், அதற்க்கு சூரி பேசும் கவுண்டர் வசனங்களுமே ரசிகர்களுக்கு ஒரே சிரிப்பு நிவாரணம்.

 

பலவீனம் . . .

 

– திரைக்கதை : கோர்வையே இல்லாத திரைக்கதை படத்திற்கு பெரிய பலவீனம். காதல், ஆக்ஷன் என்று நிற்காமல். மேலும், ரவுடி கும்பல், Gang war, CJD நோய் என்று வெவ்வேறு காலத்தில் தடுமாறுகிறது.

 

– படத்தொகுப்பு : காட்சிகளிடையே அவ்வப்போது தெரியும் lag’களை  படத்தொகுப்பாளர் ஸ்ரீதரன் கவனித்து இருக்கலாம். இரண்டாம்பாதியில், கதை முடிந்த பின்னரும் கிளைமாக்ஸ் சண்டைக்காக படம் 10 நிமிடங்கள் நீள்கிறது .

 

– பாடல்கள் : பாடலுக்காக டயலாகில் lead கொடுத்த காலம் போய், இப்பொழுது பாடல் lead’டிற்காவே ஒரு Scene’னை உருவாக்கும் நிலைக்கு போய்விட்டது திரைத்துறை. பாடல் என்றாலே நடன அமைப்பாளர் உள்ளே வரும் கலாச்சாரமும் இதில் உண்டு.

 

– கதாபாத்திர வடிவமைப்பு : ஹீரோ ஹீரோயின் உட்பட, எந்த ஒரு கதாபாத்திரமும் பலமாக அமைக்கப்படவில்லை. சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு கூட பலமான காரணம் இல்லை.

 

தொடர்ச்சி பிசிராமல் அடிவாங்க மட்டுமே வந்து போகிறார் அருள் தாஸ், ஆரண்யகாண்டம் நீட்சியாக வந்துபோகும் சூப்பர் சுப்புராயன், மற்றுமோர் செயற்கை அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன், திணிக்கப்பட்ட பாய் கதாபாத்திரத்தில் வரும் ஆனந்தராஜ், வழக்கம்போல இங்கிலிஷ் spelling காமெடியோடு சூரி, தங்களால் முடிந்த வண்ணம் செம்மையாக நடித்து இருக்கிறார்கள். கேத்தரின் தெரசா, இளைஞர்களை கவர மட்டுமே பயன்பட்டு இருக்கிறார். விஷ்ணுவிற்கு நடிக்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தும், முகபாவனைகளில் சறுக்குகிறார்.

 

படம் நெடுக சில சுவாரசியமான ஐடியாக்களை தூவிய இயக்குனர் முருகானந்தம், அதை எழுத்திலும், படமாக்களிலும் தவற விட்டுவிட்டார். 80’ஸ் காலத்து கதைக்களத்துடன் பயணிப்பதைப்போல் தெரியும் திரைக்கதையில், அணைத்து  கதாபாத்திரங்களும்  ரசிகர்களிடம் ஒட்டாமலே கடக்கிறது. காமெடி பட ரசிகர்கள் எளிதில் கணிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் திரைக்கதையில், மேலும் வெளிப்பட திணிப்புகள் அதிகம் இருப்பதை பெருமளவு குறைத்து இருக்கலாம்.

 

மொத்தத்தில் : திரைக்கதையில் பலம் கூட்டி, பிற பட பாதிப்புகளை குறைத்திருந்தால், இந்த கதாநாயகனை மேலும் ரசித்து இருக்கலாம்.

RATING : 2 / 5

Share