யார் இவன் – படம் எப்படி ?

யார் இவன் – படம் எப்படி ?

இயக்கம் : T.சத்யா

நடிப்பு : சச்சின் ஜோஷி

ஈஷா குப்தா

தன்யா பாலகிருஷ்ணன்

கிஷோர்

பிரபு

பிரதாப் போத்தன்

வம்சி கிருஷ்ணா

ஒளிப்பதிவு :  பினேந்திரா மேனன்

படத்தொகுப்பு : பிரவின் புதி

இசை : SS.தமன்

தயாரிப்பு : வைக்கிங் மீடியா அண்ட் என்டர்டைன்மெண்ட்

 

மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் கபடி வீரனின் காதல், விபரீதம், சோகம், கோவம், பழிவாங்கல் ஆகியவற்றின் உணர்ச்சிமிகு தொகுப்பே இந்த ‘யார் இவன்’. கதையில் தெரிந்த இவ்வுணர்ச்சிகள், திரைக்கதையில் சரிவர பிரதிபலித்திருக்கிறதா?!!?…

 

கதைச்சுருக்கம் : கபடி வீரனான சத்யா, புதிதாக மணமுடித்த தனது மனைவி ஸ்ருதியை சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு 15 நாள் காவலில் சிறை செல்கிறார். இவர் சிறையில் இருக்கும் இந்த 15 நாள் சம்பவங்களை விவரிக்கின்றது திரைக்கதை.

 

கதைக்களத்தை கார்ட்டூன் வடிவில் விவரிப்பதில் தொடங்கும் திரைக்கதை, இடைவேளை வரை செல்வதற்குள் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இடைவேளைக்குப்பின் சிறிது சுதரிக்க முயலுகையில், கிளைமாக்ஸில் வேகம் பிடிக்க, இறுதிக்காட்சிகளில் பல திருப்பங்களோடு விடைபெறுகிறது.

 

பலம் . . .

 

+ ஒளிப்பதிவு :

* slow-motion கபடி காட்சிகளில் ஒளிப்பதிவாளர்  பினேந்திரா மேனனின் பங்கு அலாதி. முழு  சிறைச்சாலையையும் காட்டும் top-angle காட்சிகள் அருமை. படம் நெடுக, ஒளிப்பதிவின் தரம் மிளிர்கிறது.

 

+ படத்தொகுப்பு :

* பல கோணங்களில் சொல்லப்படும் Flashback காட்சிகளை குழப்பமில்லாமல் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவின் புதி. கதைக்களத்தை முன்கூட்டியே பதியவைக்கும் Title Card நன்று.

 

+ கிஷோர் :

* போலீஸ் அதிகாரி பிரகாஷ் கதாபாத்திரத்தில் வரும் கிஷோர் சம்பந்தப்பட்ட புலனாய்வுக்காட்சிகள் தான் ரசிகர்களுக்கு பெரிய ஆறுதல். இவர் தோன்றும் அணைத்து காட்சிகளிலும் விறுவிறுப்பு தொற்றிக்கொள்கிறது.

 

பலவீனம் . . .

 

திரைக்கதை :

* கதைக்களம், அதற்கான சூழல் என்று அனைத்தும் படம் முழுவதும் செயற்க்கையாக தென்பட, ரசிகர்களால் கதையில் ஒன்றமுடியாமல் போகிறது. வெகுஜன ரசிகர்களுக்கு எந்த ஒரு  உணர்வையும் தராமல் வேகமாக செல்லும் திரைக்கதையில் வரும் திருப்பங்களை எளிதில் கணிக்க முடிகிறது.

 

காதல் காட்சிகள் :

* படம் முழுதும் தென்படும் காதல்காட்சிகள், வசனங்கள் அனைத்திலும் அதீத செய்யக்கைத்தனம். அணைத்து சம்பவங்களும்  சொல்லிவைத்தாற்போல் நடப்பதால், சினிமாவையும் தாண்டி, நாடகத்தனமாகவே தென்படுகிறது.

 

இசை & பாடல்கள் :

* SS.தமனின் பாடல்கள் சுமார். அடுத்தடுத்து வரும் பாடல்கள், படத்திற்கு பெரும் வேகத்தடை. Montage காதல் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை கூறுவதைப்போல அமைந்திருக்கின்றது. ஹீரோவின் Dubbing Voice’சைப்போல், பின்னணி இசையும் படத்திற்கு ஒன்றாமல் தெரிகிறது.

 

சத்யாவாக வரும் சச்சின், ஓகே. நடனத்தில் இருந்த உத்வேகம், நடிப்பில் தென்படவில்லை. ஸ்ருதியாக ஈஷா குப்தா, காதல்காட்சிகளில் மட்டும் ஆஜர் ஆகிவிட்டு மறைகிறார். பிரபுவிற்கு வழக்கமான அப்பா கதாபாத்திரம், இறுதிக்காட்சிகளில் ரசிகர்கள் நினைத்தாற்போல் நடந்துகொள்கிறார். வில்லனாக வம்சி கிருஷ்ணா மிரட்ட மட்டும் செய்கிறார்.சிறை வில்லன்களாக வரும் சுப்ரீத்தும், சத்ருவும் வீண் திணிப்பு. சதிஷ், கைய்யூம் சம்பந்தப்பட்ட இரண்டாம் பாதி  காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை.

 

ஒரு சில closeup காட்சிகளை தவிர்த்து, மற்ற காட்சிகள் அனைத்திலும் கதாபாத்திரங்கள் தெலுங்கு பேசுவதால், Dubbing படம் பார்ப்பது போன்றே தோன்றுகிறது. Shaolin Soccer பாணியில் அமைந்திருக்கும் கிளைமாக்ஸ் கபடி காட்சிகள், புவியீர்ப்பு சக்தியை மிஞ்சும் சாகசங்கள். ஆங்கிலப்படங்கள் அதிகம் பார்ப்பவர்களுக்கு இது பரிட்சயப்பட்ட கதைக்களமாகவே இருக்கும். வெகுஜன ரசிகர்களால் கூட எளிதில் கணிக்கக்கூடிய கடைசீ 10 நிமிட திருப்பங்களை பெரிதாக நம்பியிருக்கும் இயக்குனர் T.சத்யா, திரைக்கதையில் சிறிது கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் .

 

RATING : 2.25 / 5 

Santhosh AVK

Share