குரங்கு பொம்மை – படம் எப்படி ?

குரங்கு பொம்மை – படம் எப்படி ?

இயக்கம்  : நித்திலன் ஸ்வாமிநாதன்

எழுத்து : நித்திலன் ஸ்வாமிநாதன்

        மடோன்னே அஸ்வின் (வசனம்)

நடிப்பு : விதார்த்

       பாரதிராஜா

       இளங்கோ குமரவேல்

       P.L. தேனப்பன்

      டெல்னா டேவிஸ்

ஒளிப்பதிவு : N.S. உதயகுமார்

படத்தொகுப்பு : அபினவ் சுந்தர் நாயக்

இசை : அஜநேஷ் லோக்நாத்

தயாரிப்பு : ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ்

நீளம்  : 106 நிமிடங்கள்     

 

ஒரு குரங்கு பொம்மை போட்ட பையை, கைப்பற்ற நினைக்கும்    பரிமாற்றல் நாடகத்தை, அப்பா-மகன் பாசப்பின்னணியில் நெய்யப்பட்ட நூல்போம்மையே இந்த குரங்குபோம்மை.

 

கதைச்சுருக்கம் : சென்னையில் வேலைசெய்யும் கதிர் (விதார்த்) என்ற இளைஞனுக்கு , தற்செயலாக ஒரு குரங்குபோம்மை போட்ட பை ஒன்று கிடைக்க, அதன் உரிமையாளரை கண்டறியும் முயற்சியில் அவன் செயல்படுகையில், இடையே, தன் தந்தை வேறு வேலையாக இதே பையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்ததையும், சென்னை வந்து சேர்ந்ததும் அவரை காணவில்லை என்பதையும் அறிந்து பதறுகிறான். இவற்றின் பின்புலத்தையும், கேள்விகளுக்கான விடையையும் தேடுகிறது திரைக்கதை.

 

இரண்டிற்கும் மேற்பட்ட கதைகளை ஒரே சம்பவத்தில் கோர்க்கும் Hyperlink’வகேரா முயற்சி தான் இக்கதை என்றாலும், அதை இறுதிவரை வெற்றிகரமாக கொண்டுசென்று, இறுதியில் சில சறுக்கல்கள் காண்கிறது திரைக்கதை. சுவாரசியமாக தொடங்கும் முதல்பாதி, இடையில் வரும் அதீத காதல் காட்சிகளால் சிறிது தொய்வடைய, சுமாரான இடைவேளை காட்சியோடு முடிகிறது. பின்னர் வரும் இரண்டாம் பாதி, நூல் பிடித்தார் போல் ஒரே நேர்கோட்டில் சுவாரசியமாக நகர, இறுதிக்காட்சிகளில் மேலோங்கி நிற்கும் சினிமாத்தனம், சிறிது ஏமாற்றம்.

பலம் …

 

+ இரண்டாம் பாதி : அதீத காதல் காட்சிகளோடு, சராசரியாக செல்லும் முதல் பாதியை, சுவாரசியமாக செல்லும் இரண்டாம் பாதி மறக்கடிக்கிறது. இறுதிக்காட்சிகளில் தென்படும் செயற்கைத்தனத்தை தவிர்த்திருக்கலாம்.

 

+ படத்தொகுப்பு : கொஞ்சம் தவறினாலும், எளிதில் குழம்பும் திரைக்கதையை எளிமையாக கோகர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அபினவ். குரங்குப்பையை சுற்றி நடக்கும் நாடகத்தை, குரங்குப்பையை மைய்யமாக வைத்தே Non-Linear’றாக கோர்த்திருப்பது சிறப்பு.

 

+ பாரதிராஜா & குமரவேல் : பாரதிராஜாவின் நடிப்பு, படத்திற்கு மிகப்பெரிய தூண். இரண்டாம்பாதியில் வரும் ஒரு முக்கியமான காட்சியில் எல்லோர் பரிதாபத்தையும் அள்ளுகிறார். அவருக்கு நிகராக நிற்கும் சேகர் கதாபாத்திரத்தில் இளங்கோ குமரவேல், கலக்கல். தென்னகத்தின் nawazuddin siddiqui என்று இவரை குறிப்பிட்டால் மிகையாகாது.

 

+ பின்னணி இசை & ஒளிப்பதிவு : திரில்லர் காட்சிகளில் வேகத்தை கூட்டுகிறது அஜநேஷ் லோக்நாத்’தின் பின்னணி இசை. இரண்டாம்பாதியில், ஒளி குறைத்து எடுக்கப்பட்ட பாரதிராஜா காட்சியில் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் உதயகுமார்.

 

பலவீனம் . . .

 

காதல் காட்சிகள் : விதார்த்தை காதலிக்கும் டெல்னா டேவிஸ், காதல் காட்சிகளோடு நிற்கிறார். அவர் வரும் காட்சிகள் பெரிய அளவில் படத்திற்கு உதவவில்லை. ஹீரோயினும் அவரது அப்பா கதாபாத்திரமும் இடையில் காணாமல் போகிறது.

 

பாடல்கள் : பாடல்கள், திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை. பாடல்களில் placement, திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. கிளைமாக்ஸிற்க்கு சற்று முன் வரும் வில்லன் பாடலுக்கு வேலையே இல்லை.

 

முடிவு தெரியாத கிளைக்கதைகள் :  படத்தில் சில கிளைக்கதைகளுக்கு திரைக்கதை பதில்தரவில்லை. அவற்றுள் சில,

 

* குறவர் தம்பதியினரின் குழந்தை கட்டப்பட்டிருக்கும் லாரி என்னவாயிற்று?, கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?.

*திருடனுக்கு insomnia எனப்படும் தூக்கமின்மைக்கு தீர்வு கிடைத்ததா? எவ்வாறு?.

 

ஹீரோ அல்லது, ஒரு தனி கதாபாத்திரமாகவே தோன்றியிருக்கும் #விதார்த், இறுதிக்காட்சிகளில் உருககிவைக்கிறார்.பாரதிராஜாவின் நண்பனாக வரும் P.L. தேனப்பன் மிரட்டுகிறார்.

 

அப்பா-மகன், நண்பன் உணர்வுகளின் பின்னணியை திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் விதத்தில் உபயோகித்தமைக்கு பாராட்டுகளை அள்ளுகிறார் இயக்குனர் நித்திலன். பாரதிராஜா, தன் பின்புலத்தை விவரிக்கும் இடம் உட்பட பல இடங்களில் வசனங்கள், சிறப்பு. பல கதைகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில், சிலவற்றை வழியிலேயே விட்டுவிட்டு மூலக்கதைக்கு மட்டும் முடிவு சொல்லியிருப்பதன் மர்மம் புலப்படவில்லை.படம் முழுவதும் ரியாலிட்டி சினிமாவாக பயணித்து, முடிவு மட்டும் சினிமாத்தனமாக மாறியது சிறிது நெருடலை ஏற்படுத்தினாலும், ஒரு புதியமுயற்சியில் சில சறுக்கல்களை பொறுத்துக்கொள்ளலாம் என்றளவில் மட்டுமே இந்த படத்தை பாராட்டலாம்.

 

மொத்தத்தில் : சுவாரசியம் குறைந்த முதல் பாதியையும், முடிவில் சில விளக்கமில்ல கேள்விகளையும் விலக்கிக்கொண்டு பார்த்தால், இது ஒரு புது முயற்சி எனலாம்.

RATING : 3 / 5

Santhosh AVK

Share