Sujatha Rangarajan 7th death anniversary – v miss u sir

Sujatha Rangarajan 7th death anniversary – v miss u sir

சுஜாதாவின்  7ம் நினைவு நாளில் அவரை பற்றி நானும் நீங்களும் நினைத்து கொண்டு இருக்கே அவரின் பட வசனங்கள், படித்த கதைகளில் ஒரு சிலவற்றை பகிர ஆசைபடுகிறேன்.. MIss You வாத்தியார்

நான் முதலில் தமிழ் பாட புத்தகம் தாண்டி படிக்க ஆரம்பித்தது தினத்தந்தியை அதன்பிறகு ஆனந்த விகடன்,குமுதம் நாவல் என்று பார்த்தால் ராஜேஷ்குமார் கிரைம் நாவல்கள் பள்ளி விடுமுறையில் படிப்பேன் மிக விறுவிறுப்பாக இருக்கும் அதன் பிறகு தான் வாத்தியார் சுஜாதாவின் நூல்களை படிக்க ஆரம்பித்தேன் அவரின் நூல்கள் தான் எனக்கு நிறைய நாவல்கள்,கதைகள் படிக்க துண்டியது பல தரப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியது.அவரின் எழுத்தில் ஒரு வசீகரம்,நகைச்சுவை,இளமை துள்ளல் இருக்கும்.பிரிவோம் சந்திப்போம் நாவல் படிச்சு மதுமிதா மீது காதலே கொண்டேன். என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற அறிவியல் சார்ந்த எழுத்துகளும் ஒரு பாமரனுக்கு புரியற மாதிரி எழுத அவரால் மட்டும் தான் முடியும். அனிதா இளம் மனைவி என்ற நாவலில் அனிதாவிற்கு வரும் அத்தனை காதல் ப்ரோபோசலை ஒரு பெண்ணின் பார்வையில் மிக சிறப்பாக எழுதி இருப்பார்.கொலையுதிர் காலம் நாவல் இறுதியில் பேயா பழிவாங்கிகொல்கிறதா இல்லை தற்செயலா நடக்குதான்னு அவரவர் பார்வயில் புரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுவர். ஸ்ரீரங்கத்து தேவதைகள் படிப்பவர்கள் ஸ்ரீரங்கத்தை அவருடன் வாழ்ந்த ஒரு அனுபவத்தை கொடுத்து இருப்பார்.ஆ என்ற நாவல் அதில் ஒருவருக்கு ஏற்படும் hallucination வைத்து படிக்கும் நமக்கும் hallucination உண்டு செய்து இருப்பார்.. வாத்தியாரை படித்த யாரும் கணேஷ்-வசந்த். பெயரை மறந்து இருக்கமாட்டார்கள்…கணேஷ்-வசந்த் பெயர் இவர் எழுதிய காலத்தில் மிகவும் famous பலபேரு அப்போ தங்கள் குழந்தைக்கு இவர்கள் பெயர் வைக்கும் அளவுக்கு. அதுவும் வசந்த் பெண்களை ஜொள் விடுவதை பெண்களே ரசிக்கும் படி எழுதி இருப்பார்……

சுஜாதாவின் மனைவி கிடைத்தாள் என்ற குறுநாவலில் வரும் ஒரு பத்தி இது முதலிரவில் கணவனும் மனைவியும் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது மனைவி கேட்கிறாள், அவளது பெயர் வேணி.
உங்களுக்கு பிடிச்ச புத்தகம் எது?
வேணி
படிங்க
முதலில் அட்டைப்படத்தைப் பார்த்தான், பிரித்தான், பொருள் அடக்கத்தைத் தேடினான், முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்தான், ஓவியங்களை ரசித்தான், கவிதைகளைத் தொட்டான், வார்த்தைகள், இடைவெளிகள், இடைசெருகல்கள்………………
ஒரு முதலிரவை இவ்வளவு எளிமையாக, ரசிக்கத்தக்க வகையில் வேறு யாராலும் எழுதமுடியாது…….

சுஜாதாவின் இருவரி சிறுகதைகள்

தலைப்பு : 2050ல் குழந்தை.
கதை : தங்கச்சின்னா என்னம்மா?

தலைப்பு : வரதட்சணை மாப்பிள்ளையின் ஜானவாச ஊர்வலம்.
கதை : ஏறுய்யா ஜீப்புல

தலைப்பு : ஆபிஸில் எத்தனை ஆம்பிளைங்க.?
கதை : முதலிரவில் கேள்வி.

தலைப்பு: சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தைகள்.
கதை : கன்சீல்ட் வயரிங்ப்பா

காதலி- சரி என்னிக்கு நம்ம கல்யாண்த்த வச்சிக்கலாம்?
காதலன் – நேத்திக்கு

சினிமாவில் இவரின் கூர்மையானவசனங்கள் படத்தின் கதையை ஒருவரி வசனத்தில் சொல்லி விடுவார் உதாரணம் அந்நியனில் ஒரு ரிக்ஷகாரன் வேறு வழியில் போக அப்போது விக்ரமின் தங்கை இது தப்பான வழி தாத்தா அதுக்கு அவர் நேர் வழி சுத்து குழந்தைன்னு சொல்வாரு இதான் அந்நியன் படத்தின் கதை அடுத்து இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தா -சிங்கப்பூர்,மலேசியா போன்ற குட்டி குட்டி நாடு, தீவு எல்லாம் எப்படி வளந்ததுன்னு நிழல்கள் ரவி – அங்கே எல்லாம் லஞ்சம் இல்ல இந்தியன் – இருக்கு ஒரு அடி செவுளிய அறையவார் இருக்குன்னு சொல்லி இன்னொரு அடி அங்கே எல்லாம் கடமையா மீற தான் லஞ்சம். இங்க தான்டா கடமையா செய்யவே லஞ்சம்…

இந்தியன் என்கிற திமிரா? இல்லை, தமிழன் என்கிற திமிர்.- ரோஜா
உங்களுக்கு ஆயுதம் எங்கே இருந்து வருது?
இதைக் கேட்க உனக்கு தைரியம் எங்கே இருந்து வருது.’ – உயிரே
காதல் வந்தால் ரோபோவிற்கும் நட்டு கழண்டு விடும்- எந்திரன்
ஆணவம் கூடாது … இது ஆணவம் இல்ல சார் யோக்கியம் – ஆயுத எழுத்து
இந்த பூமில எப்ப அமைதி நிலவுதோ அன்னைக்கு வரேன் – கன்னத்தில் முத்தமிட்டால்
காதல்ன்னு ஒன்னு இல்லவே இல்ல , doesn’t exist., x chromosome, y chromosome, xx xy, அவ்ளோதான் விஷயமே எல்லாம் organic chemistry., என்ன புரிஞ்சதா?.. ஆயுத எழுத்து

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆகிட்டங்கலே – முதல்வன்

‘சிவாஜி’ ரஜினி – (ஒரு ரூபாயைச் சுண்டி இறந்துகிடக்கும் சுமனின்நெத்தியில் அடித்து) இதைக்கூட நீ எடுத்துட்டுப் போக முடியாது..

அந்நியன் – அம்பி- ரயிலில் சாப்பாடு சரியில்லை, மின்விசிறி சுழலவில்லை
டி.டி.ஆர், – அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க என்பார்.
அம்பி- அட்ஜட்ஸ்ட் பண்ணி பண்ணித்தான் இந்த தேசம் இப்படி இருக்கு…

இந்தியன் படத்தில சந்துரு (கமல்): இந்த உலகத்துல இருக்கற எல்லா வழியும் குறுக்கு வழியா மாறிடுச்சு… இது எங்க அப்பாவுக்குப் புரியல!

அந்நியன் படத்தில: தப்பு என்ன பனியன் சைஸா? ஸ்மால், மீடியம், லார்ஜ்னு…விளைவுகளோட சைஸைப் பாருங்க… எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்!

முதல்வன் படத்தில் கிளைமாக்ஸல ‘That was a nice interview..’

இன்னும் இது போல எக்கசக்க வசனங்கள்.. நான் பார்த்து பேச ஆசைப்பட்ட ஒரு சில கலைஞர்களில் அவரும் ஒருவர். ஆனால் காலம் அதை நடைபெற விடாமல் அவரை வெகு சீக்கிரம் நம்மை விட்டு எடுத்து சென்று விட்டது.. இன்று அவரின் நினைவு நாள்… எல்லார்க்கும் சொல்வது போல அவர் உடல் மறைந்தாலும் அவர் எழுத்து மூலம் நம்முடன் தான் இருக்கிறார் என்று சொன்னால் என்னையும் கிண்டல் செய்து நகைச்சுவையை ஏதாவது எழுதி இருப்பார். வாத்தியாரை பற்றி எழுத ஆரம்பித்தால் மிக இலகுவாக எனக்கு கூட எழுத்து வருகிறது …

27th feb Writer Sujatha Rangarajan’s 7th death anniversary – v miss u வாத்தியார்
SarathBabu


சரத் பாபு

Share