சாலையோரம் – படம் எப்படி?

சாலையோரம் – படம் எப்படி?

குப்பைகளை எடுக்கும், சாக்கடைகளை சுத்தம் செய்யும் வேலை பார்ப்பவர் கதையின் நாயகன் ராஜ். உடன் பணிபுரியும் சிங்கமுத்து அன் கோ கூட்டங்களுடன் சேர்ந்து குடியும் குப்பையுமாக வாழ்ந்துவருகிறார். இந்நிலையில் மோதிரத்தை குப்பைத்தொட்டியில் தவற விடும் கதாநாயகி ஷெரினா, ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் கண்டெடுக்கிறார். இதன் மூலம் இவர்கள் நட்பு தொடர்கிறது. அது மட்டும் அல்லாமல் ஷெரினா பாலிதீன் பைகளை எப்படி மறுசுழர்ச்சி செய்வது என்பதை ப்ராஜெக்டாக செய்ய துவங்குகிறார். அதற்கு ராஜும் அவரது நண்பர்களும் உதவுகின்றர். இந்த சூழ்நிலையில் ராஜுக்கு ஷெரினா மீது காதல் மலர்கிறது… ஷெரினாவின் தந்தை சிங்கப்பூரில் இருப்பதால் அவளை பாண்டியராஜ் கவனிப்பில் விட்டுசெல்கிறார்.

ஒரு புறம் காதலும் இன்னொரு புறம் குப்பையும் சேர சேர ஷெரினாவின் ப்ராஜக்ட் வெற்றியடைகிறது… இந்த நிலையில் ஷெரினாவின் ப்ராஜெக்டை வெளிநாட்டிற்கு விற்க பாண்டியராஜன் ப்ளான் போட ஷெரினாவை வீட்டுசிறையில் வைக்கிறார். இறுதியில் ஷெரினாவை காப்பாற்றினார்களா, இருவரின் காதலும் சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை…

இருதயத்தில் இருக்கும் அடைப்பை சரி செய்யக்கூட வசதிகள் வந்துடுச்சு. ஆனால் சாக்கடை அடைப்பை எடுக்க இன்னும் ஒரு வசதி கூட இல்லயே என கேட்க்கும் இடங்களில் நம் அரசு துப்புறவாளர்கள் மீது வைத்திருக்கும் அதீத அக்கறை தெரிகிறது. படத்திற்கான கதைக்களம் வித்தியாசமாக இருந்தாலும் மெதுவாக நகர்ந்த திரைக்கதை படத்தின் மீதான ஈர்ப்பை குறைத்துவிட்டது. முக்கியமாக நாயகன் ராஜ் அவர்களின் நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டி இருக்கிறது. படத்தின் முதுகெலும்பாக சிங்கம்புலி  முழுதும் ஹீரோவுடன் அடிக்கும் கூத்து ஜாலி கலாட்டா.

Share