உனக்கென்ன வேணும் சொல்லு – விமர்சனம்

உனக்கென்ன வேணும் சொல்லு – விமர்சனம்

தனது எட்டு வயது மகனின் விநோத நோயின் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் பூஜா, அவளுக்கு ஏற்படும் விநோதமான அமானுஷ அனுபவம் அவளை பயமுறுத்துகிறது. அது ஒரு எட்டு வயது சிறுமியின் ஆத்மா என்று, பேயோட்டும் ஒருவனின் மூலம் அறிகின்றார்கள், அது ஏன் அங்கு வந்தது என்ற காரணம் தெரியும் போது தான் அதிர்ச்சி காத்திருக்கிறது, கதாநாயகியே தன் வாயால் தனக்கு திருமணத்திற்கு முன் ஒரு காதலன் (கார்த்திக்) இருந்ததாகவும், இப்போழுது சென்னையில் தங்கியிருக்கும் அந்த வீட்டில் தான் ஒன்றாக வாழ்ந்ததகாகவும் தங்களுக்கு ஒரு குழந்தை உண்டானதாகவும் பிறக்காத அக்குழந்தையின் மீது கதாநாயகன் மிகுந்த அன்பு பாராட்டினதாகவும் ஆனால் வறுமையும், கதாநாயகனின் பொறுபற்ற தன்மையாலும் அவளால் அந்த குழந்தையை பெற்று வளர்க்க முடியாது என்று, அதை அழிக்க முயற்சித்து தோற்றுபோகிறாள். இருப்பினும் கார்த்திக் வேளைத் தேட வெளிநாடு சென்றிருந்த சமயம் பெற்ற குந்தையை தன் தோழி சுவேதா உதவி கெண்டு அனாதைகள் ஆஷரமத்தில் விட்டுவிட்டதாகவும், இது அறிந்த கார்த்திக் தன்னிடம் சண்டையிட்டு பிரிந்ததாகவும், அனால் அது எல்லாம் எட்டு வருடத்திற்கு முன் நடந்தது என்றும் கூறி முடிக்கிறாள். ஆஷரமத்தில் விட்டு அந்த குழந்தை என்னவாயிற்று என்று தேட, அது ஒரு மனநலம் குன்றிய பெண்ணால் திருடப்பட்டதும், அவளால் அந்த குழந்தையை வளர்க்க முடியாமல் மூன்றே நாளிள் இறந்து விடுகிறது.

uvs-still01

மனநலம் பாதிக்கப்பட்ட அவள், இறந்த குழந்தையின் ப்ரேதத்துடன் வாழ்ந்து வருவதையும் கண்டறிகின்றார்கள். இறந்த குழந்தையின் ஆத்மா தன் பெற்றோருடன், குறிப்பாக தான் பிறப்பதற்கு முன்பிலுருந்தே தன் மேல் பாசம் பாராட்டின தன் தந்தையுடன் சேரவேண்டும் என்று ஆசைபடுவதையும் தெரிந்து கொள்கிறார்கள், குழந்தையின் ஆத்மாவை அழைத்து பேசுவதாலும், மனநலம் பாதிக்கப்பட்டவளிடமிருந்து இறந்த குழந்தையின் ப்ரேதத்தை வாங்கி எறிப்பதாலும் மட்டுமே இதை சரிசெய்ய முடியும் என்று பேயோட்டி கூற இறுதியில் என்ன நடந்தது என்பது தான் முடிவு.

படத்தின் முதல் காட்சியை மட்டும் தவறவிடாதீர்கள். இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கமும் அழுத்தமான கதைகளம், திரைக்கதை வசனம், இசை மற்றும் ஒளிப்பதிவு சிறப்பா இருக்கு. புதுமுகமென்று சொல்முடியாத அளவுக்கு சிறப்பாக நடிச்சிருக்காங்க அனு மைம், கோபி தீபக், பரமேஷ், ஜாக்லின் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா அனீதா. முதல்முறையாக ட்ராபிக் சிக்னலில் தன் இறந்த குழந்தையின் உருவத்தை பார்க்கு இடத்தில் சிக்னலில் மஞ்சள் நிறத்திலிருந்து சிகப்பு நிறத்திற்கு மாறும் காட்சி, வேளையால் தன் எஜமானியை தேடி பங்களாவுக்கு வரும் காட்சியிலும் இறக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் பளிச்சிடுகிறார். “அப்போ இன்னைக்கே அட்மிட் பன்னில்லாமா dr.” என்றதற்கு,” செக்கப்பன்னனும். அப்சர்வேஸன்ல வைக்க முனா அட்மிட் பன்னிதானே ஆகவும்” என்று dr. பதில் பேசும் வசனம் சிறப்பாக இருக்கு இசையமைப்பாளர் சிவசரவணன் பின்னனி இசை சிறப்பாக இருக்கு. சுவேதாவின் இறுதி சடகில் சுவேதாவின் தந்தையாக நடித்த திரு.அமரசிகாமி மகள் இறந்த தேதியை 26 என்று சொல்வது தினித்த மாதிரி இருக்கு, மற்றும் ஒரு காட்சில் பேயோட்டியாக வரும் மருத்துவ வளாகத்திளெயெ புகைபிடிப்பதை தவிர்த்திருக்கலாம், ஒளிப்பதிவாளர் மனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கு, ஒருசில இடங்களிள் மட்டும் focus குறைந்தது தெரிந்தது.

திகில் பட பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்து இந்த படம், பெற்ற குழந்தையை அனாதையா விடும் பொறுப்பற்ற பெற்றோர்களுக்கு ஒரு பாடம் இந்த படம்.

Share