Chennai Traffic Police Road Safety Awareness Programme

Chennai Traffic Police Road Safety Awareness Programme.

சென்னை போக்குவரத்து காவல் துறையினரின் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.

சென்னை ஜன 10 –

வடபழனி ஃபேரம் மால் எதிரில் சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினரின் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் காவல் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அந்த வழியாக சென்ற அனைத்து வாகன ஓட்டிகளிடமும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள பத்து வழிமுறைகளை கொண்ட துண்டுபிரசுரத்தை வழங்கினர். மேலும் பொதுமக்கள் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட சுவரொட்டியில் நான் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பேன் என்று கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். காவல் துறையினரின் இந்த மென்மையான போக்கு அனைவரையும் கவர்ந்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Chennai Traffic Police - image 1 Chennai Traffic Police - image 2 Chennai Traffic Police - image 3 Chennai Traffic Police - image 4 Chennai Traffic Police - image 5 Chennai Traffic Police - image 6 Chennai Traffic Police - image 7 Chennai Traffic Police - image 6 Chennai Traffic Police - image 8

 

காணொளியை காண இந்த சுட்டியை தொடரவும்.

Share