2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருது

2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருது

காலச்சுவடு பதிப்பக நூலாசிரியர்களான ஆ.இரா. வேங்கடாசலபதி மற்றும் பா. வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருது வழங்கப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது அளிக்கப்பட்டு வருகிறது.

 

ஆ. இரா. வேங்கடாசலபதி

வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ஆ. இரா. வேங்கடாசலபதி குடியாத்தத்தில் 1967ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்ப் பதிப்புலகத்தின் சமூக வரலாறு பற்றிய ஆய்வுக்காக, புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கி, சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் எனச் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கிறார்.

காலனியக் காலகட்டத்தில் தமிழ்ச் சமூகப் பண்பாடு மற்றும் இலக்கிய வரலாறுகள் பற்றிய ஆய்வுகளைச் செழுமையாக முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர், இலக்கிய, வரலாற்றுப் புலங்கள் சார்ந்து சீரிய பதிப்புப் பணியிலும் இடையறாது ஈடுபட்டுவருபவர்.

 

ஆ. இரா. வேங்கடாசலபதியின் காலச்சுவடு நூல்கள்

எழுக, நீ புலவன்! பாரதி பற்றிய கட்டுரைகள் (2016)
ஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள் (2016)
பாரதி: கவிஞனும் காப்புரிமையும் (2015)
முச்சந்தி இலக்கியம் (2004)
நாவலும் வாசிப்பும் (2002)
அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள் (2000)

பதிப்பு நூல்கள்

புதுமைப்பித்தன் வரலாறு, தொ.மு.சி. ரகுநாதன் (2016)
அண்ணல் அடிச்சுவட்டில், ஏ.கே. செட்டியார் (2016, 2003)
சென்று போன நாட்கள், எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு (2015)
பாரதியின் சுயசரிதைகள் (2014)
வ.உ.சி.யின் திலக மகரிஷி (2010)
பாரதி கருவூலம்: ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துகள் (2008)
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் (2006)
பாரதி, ‘விஜயா’ கட்டுரைகள் (2004)
புதுமைப்பித்தன் கட்டுரைகள் (2002)
புதுமைப்பித்தன் கதைகள் (2000)
அன்னை இட்ட தீ, புதுமைப்பித்தன் (1998)

மொழியாக்கம்

துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம், பாப்லோ நெரூடா (2005)

 

பா.வெங்கடேசன்

புதினம், கவிதை, சிறுகதை, குறுநாவல் எனப் படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் தேர்ந்த, அழகுணர்வோடான ஆக்கங்கள் மூலம் கவனம் பெற்ற முதன்மையான படைப்பாளி பா. வெங்கடேசன். “மொழிக்குள் இயல்பாகவே இருக்கும் இசைமையை உணரும்வண்ணம் வார்த்தைகளின் லயத்தைப் பின்பற்றியே என் கதைமொழி உருவாகிறது,” என்று கூறும் வெங்கடேசன் 1962ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். தற்போது ஹோசூரில் வசிக்கிறார்.

பா.வெங்கடேசனின் காலச்சுவடு நூல்கள்

வாராணசி (புதினம்) (அச்சில், 2019)
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் (கட்டுரைகள்) (2017)
பாகீரதியின் மதியம் (புதினம்) (2016)
நீளா (கவிதைகள்) ( 2014)
ராஜன் மகள் (சிறு புதினங்கள்) (2002)

Share