கஜினிகாந்த் – படம் எப்படி ?

கஜினிகாந்த் – படம் எப்படி ?

இயக்கம் : சந்தோஷ்.P. ஜெயக்குமார்
நடிப்பு : ஆர்யா
சாயேஷா
சதிஷ்
சம்பத் ராஜ்
ஆடுகளம் நரேன்
காளி வெங்கட்
நான் கடவுள் ராஜேந்திரன்
கருணாகரன்
ஒளிப்பதிவு : பல்லு
படத்தொகுப்பு : பிரசன்னா.G.K.
இசை : பாலமுரளி பாலு
தயாரிப்பு : K.E.ஞானவேல்ராஜா
நீளம் : 146 நிமிடங்கள்


கதைச்சுருக்கம் :
எதையும் எளிதில் மறக்கும் விசித்திர வியாதி கொண்ட ரஜினிகாந்த் (ஆர்யா), வந்தனாவின் (சாயேஷா) முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறான். இவர்கள் திருமணம் செய்யும் முயற்சியில் ரஜினிக்கு பல சிக்கல்கள் எழுகின்றன, பின்னர் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையே திரைக்கதை.


பலம் …

+ ஒளிப்பதிவு : படம் முழுவதும் வண்ணங்களை திரையில் அள்ளித்தெளித்து படத்தின் பட்ஜெட்டை நம் நினைவில் கோலாதவண்ணம் இருந்தது ஒளிப்பதிவு. பாடல் காட்சிகளில் கூடுதலாக கவனிக்க வைக்கிறார்.

+ இரண்டாம்பாதி : முதல்பாதி காட்சிகள் ஏனோ நம் மனதில் ஒட்டாமல் பயணிக்க,
இரண்டாம் பாதி காட்சிகளும், காமெடிகளும் ஓரளவு ஆறுதல் எனலாம்.

 

பலவீனம் …

– முதல்பாதி : படத்தின் தலைப்பை கதையோடு இணைக்கும் முதன்மை காட்சிகளைத்தவிர, முதல்பாதியின் மற்ற காட்சிகள் அனைத்தும் படு செயற்கை. இரண்டாம் பாதி காட்சிகள் ஓரளவு நம்மை ஆசுவாச படுத்தினாலும், படத்தின் அடிப்படைகளை நமக்கும் புரியவைக்கும் கடமையை முதல்பாதி காட்சிகள் சரிவர செய்யவில்லை.

– இசை : பாடல்கள்,பின்னணி இசை என்று எந்தவிதத்திலும் நம்மை கவராமல் கடந்துசெல்கிறது பாலமுரளி பாலு அவரது இசை.

நடிகர்களுள், சம்பத்ராஜ் தவிர மற்ற அணைத்து கதாபாத்திரங்களும் ஏதோ கடமைக்கென வந்துபோவது போலவே ஒரு தோற்றம். பல காட்சிகளில் நடிக்க முயற்சித்திருக்கும் ஆர்யாவுக்கு சில இடங்களிலேயே வெற்றி காண்கிறார்.
தமிழ்சினிமாவின் சாபமான மற்றுமொரு லூசு ஹீரோயின் கதாபாத்திரத்தில் சாயேஷா, பார்க்க அழகாக இருக்கிறார். சதீஷின் காமெடி ஒரு சில இடங்களில்

குபீர. ஆடுகளம் நரேன் பரவாயில்லை. கருணாகரன், காளிவெங்கட் ஆகியோரின் கதாபாத்திரங்கள் வீணடிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் ரசிக்கவைத்த அம்சங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, பல பழைய இடியாக்களை ஒரு சேர்த்து, அவசர அடியாக ரொம்பவும் சுமாரான படத்தை நமக்கு கோர்த்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ்.

மொத்தத்தில் : ஒரு இயல்பான கதையில், இயற்கையாக அமையவேண்டிய பல காட்சிகளில் செயற்கை சாயங்கள் பல கலந்த, சராசரியான படைப்பாக வந்துள்ளது இந்த கஜினிகாந்த்.

Share