மணியார் குடும்பம் – படம் எப்படி?

மணியார் குடும்பம் – படம் எப்படி?

இயக்கம் : தம்பிராமையா

நடிப்பு : உமாபதிராமைய்யா

                 மிருதுளா முரளி

                 தம்பி ராமையா

                 ராதாரவி

                 விவேக் பிரசன்னா

                 ஜெயப்ரகாஷ்

                 நான் கடவுள்ராஜேந்திரன்

                 தங்கதுரை

                 ராமர்

ஒளிப்பதிவு : P.K.வர்மா

படத்தொகுப்பு : கோபிகிருஷ்ணா

இசை : தம்பி ராமையா (பாடல்கள்)

                P.தினேஷ் (பின்னணி)

தயாரிப்பு : தேன்மொழி சங்கிரா 

நீளம் : 128 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் : ஏழ்மையில் வாடும் மணியார் கும்பத்தின் தலைவரான நர்த்தங்க ஸ்வாமி (தம்பி ராமைய்யா), வேலையில்லாத தனது மகன் குட்டிமணியாருக்கு (உமாபதி) தன் அக்கா மகளை பெண்கேட்க சென்ற இடத்தில அவருக்கு அவமானம் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து, தொழில் துவங்கும் முனைப்பில் களமிறங்கும் குட்டிமணி, அவன் சேர்க்கும் 1 கோடி ரூபாயை வழிப்பறியில் இழக்கிறான். பின்னர் நடக்கும் சம்பவங்களின் விரிவாக்கமே திரைக்கதை.

 

பலம்

+ தம்பி ராமைய்யா : படத்தின் பல இலாக்காக்களை கையாள்வதோடு, நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார் தம்பி ராமைய்யா. உணர்வுபூர்வமான காட்சிகளில் முத்திரை பாதிப்பதோடு, முழு படத்தையும் தன் தோளில் சுமந்து இருக்கிறார்.

+ ஒளிப்பதிவு : இயற்க்கை வளங்களை தோலுரிக்கும் முதன்மை காட்சிகளுடே, நம் கவனத்தை ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் வர்மா. மேலும் சண்டைக்காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் மிளிர்கிறார்.

 

பலவீனம்

திரைக்கதை : படம் துவங்கி 10 நிமிடத்தில் ரசிகர்களுக்கு ஏற்படும் திரைச்சோர்வு, படம் நெடுக அகலவே இல்லை. படத்தில் நிகழும் சம்பவங்களும், அதற்கு உருவாக்கப்பட்ட காட்சி அமைப்புக்களிலும் ரசிகர்களிடத்தில் எவ்வித எதிர்பார்ப்பையும் உண்டாகாததால், படத்தின் திரைக்கதை தட்டையாக பயணிப்பதைப்போல் ஒரு உணர்வு.

இசை : தம்பி ராமைய்யாவின் பாடல்களிலும், P.தினேஷின் பின்னணி இசையிலும் பழமை சாயல் தூக்கல். பாடல்கள் திரைக்கதையில் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் ரசிகர்களை சோதிக்கிறது.

கதை அளவிலும், திரைக்கதை அளவிலும் எந்தவித புதுமையையும் கையாளாமல், பழமை சாயலில் தென்படும் காட்சிகள் படத்திற்கு பெரும் பலவீனம். தவிர, ஹீரோ ஹீரோயின் முதல், கடை நிலை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வரை எந்த கதாபாத்திரங்களும் மனதிற்கு ஒட்டாததால், ரசிகர்களோடு எந்த கட்டத்திலும் கதை உறவாட மறுக்கிறது. உமாபதி, பாடல்கள், நடனம் உட்பட எல்லாவற்றிலும் முன்னேற்றம் தேவை. மிருதுளா, அழகு பதுமை மட்டுமே.  ஓரளவு தெரிந்த முகங்களான, ஜெயப்ரகாஷ், ‘நான் கடவுள்ராஜேந்திரன் போன்ற நடிகர்களின் கதாபாத்திரங்களும் மொக்கையாக போக, பெருமளவு இப்படம் ரசிகர்களிடையே எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்துசெல்கிறது. நீண்ட நெடிய வசனங்கள், ரசிகர்கள் காதின்மேல் தூக்கிவைக்கப்படும் பாறாங்கல்.

படத்தில் ஏற்பாடும் முக்கிய நிகழ்வுகளில் துவங்கி, தொழில்நுட்பம், கதாபாத்திர வடிவமைப்பு, காட்சியமைப்புகள், என்று எந்த இலாக்காவும் இப்படத்தை காப்பாற்றவில்லை என்பதே நிதர்சனம்.

 

மொத்தத்தில் :

நீண்ட வசனங்கள், எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை, படம் முழுவதும் பரவிக்கிடக்கும் செயற்கைத்தனம். இவற்றை ஓரளவு சரி செய்திருந்தால், பேர்சொல்லும் படியாக அமைந்திருக்கும் இந்த மணியார் குடும்பம்.

Share