தினேஷ்க்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன்! – அண்ணனுக்கு ஜே இயக்குநர் ராஜ்குமார்

தினேஷ்க்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன்! – அண்ணனுக்கு ஜே இயக்குநர் ராஜ்குமார்

“அண்ணனுக்கு ஜே ” திரைப்படம் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தினை அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

 

இந்தப்படத்தில் கதநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, மயில் சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார். எடிட்டிங் G .B வெங்கடேஷ் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

 

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் தினேஷ்  “இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மஹிமா அருமையாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அர்ரோல் 7 பாடல்கள் நன்றாக இசையமைத்துள்ளார். ராதா ரவி அவர்களுடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் ” இவ்வாறு பேசினார்.

 

ராஜ்குமார் பேசியவை “முதலில் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், இப்படத்திற்கு பக்கபலமாக கூட இருந்துள்ளார். நடிகர் தினேஷ் அவர்களுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன். நடிகை மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார். மயில் சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்பபோதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்து இருப்பார்கள், இந்தபடத்தில் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என பேசினார்.

 

இசைஅமைப்பாளர் அர்ரோல் கொரளி பேசியவை ” இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது மற்ற படங்களை விட இந்த படத்தில் ஒருவித வித்யாசமான முறையில் இசைஅமைத்துள்ளேன். 7 பாடல்களுள் ஒவ்வொருவிதம் ” இவ்வாறு பேசினார்.

 

நடிகை மஹிமா நம்பியார் பேசியவை ” வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின்  தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது.இந்தப்படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்.இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி.மேலும் இந்த படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளேன்” இவ்வாறு பேசினார் .

 

வெற்றிமாறன் பேசியவை ” நடிகர் தினேஷ் தனது முழு எனர்ஜி வாய்ந்த  நடிப்பை தந்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்குமார் நல்ல படத்தை தந்துள்ளார். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என பேசியுள்ளார்.

Share