செம போத ஆகாதே – படம் எப்படி ?

செம போத ஆகாதே – படம் எப்படி ?

இயக்கம் : பத்ரி வெங்கடேஷ்

நடிப்பு :          அதர்வா

மிஸ்தி

அணைக்கா

கருணாகரன்

ஜான் விஜய்

GK ரெட்டி

யோகிபாபு

ஒளிப்பதிவு : கோபி அமர்நாத்

படத்தொகுப்பு : KL பிரவீன்

இசை : யுவன் ஷங்கர் ராஜா

தயாரிப்பு : அதர்வா

நீளம் : 133 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் : IT இளைஞனான ரமேஷ் (அதர்வா), அவன் நண்பன் நந்து (கருணாகரன்) மூலமாக நீனா (அணைக்கா) என்கிற விபச்சாரியை தன் வீட்டுக்கு அழைக்கிறான், பின்னர் நடக்கும் ஒரு நாள் சம்பவங்கள் அவன் வாழ்வையே திருப்பி போடுகிறது. அச்சம்பவங்களின் தொகுப்பே இப்படம்.

 

பலம் …

+ அதர்வா – கதையின் நாயகனாக தோற்றத்திலும் நடிப்பிலும் அதனை தெளிவு. படத்தில் வரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களை கையாளுவதில் இருக்கும் பதட்டத்தை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். சண்டைக்காட்சிகளில் மிளிர்கிறார்.

 

+ கருணாகரன் – பல்வேறு சூழ்நிலைகளிலும், இவரின் ஒரு வரி காமெடிகள் ஆறுதல் அளிக்கிறது. அதர்வாவை கேள்விகேட்டு வெறுப்பேற்றும் சமயங்களில் கைதட்டல்களை அள்ளுகிறார்.

 

+ ஒளிப்பதிவு : வீட்டு பரனை, மலைப்பிரதேசம், புல்வெளி என்று பல்வேறு இடங்களை தனது கேமரா கண்கள் மூலம் நமக்கு விருந்தளித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்.

 

+ இசை : யுவனின் பின்னணி இசை படத்தின் ஆகச்சிறந்த ஆறுதல். பல இடங்களில் இவரின் இசைதான் படத்தையே தாங்கி நிற்கிறது. பாடல்களும் படத்தில் அவை அமைந்த இடங்களும் சுமார்.

 

பலவீனம் …

– திரைக்கதை : ஒரு நிலையை, ஒரு நேர்கோட்டில் பயணிக்காத திரைக்கதை படத்தின் மிகப்பெரும் பலவீனம். ஒரு காட்சிக்கும் மற்ற காட்சிக்குமே சம்பந்தம் இல்லா வண்ணம், கதைக்கு சம்பந்தமே இல்லாத 2 பிளாஷ்பேக் காட்சிகள் கொண்டு பயணிக்கும் இரண்டாம்பாதி, ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதிக்கிறது.

 

– கதாபாத்திரங்கள் : ஹீரோ துவங்கி, எந்த கதாபாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை. குறிப்பாக ஜான் விஜயின் செய்கைள் வரைமுறைக்கே அடங்காமல் செல்வது வேதனை. ஹீரோயின் கதாபாத்திரமும் அதில் மிஸ்தியின் நடிப்பும் துளியும் சம்பந்தமில்லை.

 

ஒரு காமெடி படத்திற்குரிய எல்லா அம்சத்தையும் கொண்டும், அவற்றை சரியான விகிதத்தில் கலக்காமல் விட்டதே படத்தின் பெரிய பிரச்சனை. Black Comedy’யாகவும் இல்லாமல், Adult Comedy வகேராவும் சேராமல், ஒரு கலவையான படமாக வந்திருக்கிறது இப்படம். கதாபாத்திரங்களை வழிநடத்தும் திரைக்கதை நிலைத்தடுமாறி சென்றதே எழுத்தளவிலான பிரட்சனை. இப்படத்தின் மூலக்கதையும் பல பழைய காமெடி படங்களை ஞாபகப்படுத்த, இறுதியில் இது தனித்தன்மையை இழந்த ஒரு படைப்பாகவும், திரையில் நடக்கும் எதுவும் ரசிகர்களை ரசிக்காத வண்ணம், ரசிகர்களுடன் திரைத்தொடர்பே இல்லாத ஒரு சித்திரமாக நிற்கிறது. இயக்குனர் பத்ரி எழுத்துக்களில் இருக்கும் பலவீனமே, திரையில் தோன்றியுள்ளதோ என்றே வினாவ தோன்றுகிறது.

 

மொத்தத்தில் : ஒரு நல்ல காமெடி சித்திரத்தை, சீரியஸ் பாணியில் கொடுக்க முயற்சித்து, ஒரு கலவையான படமாக வந்திருக்கிறது இந்த செம போதை ஆகாதே.

 

மதிப்பீடு : 2.25 / 5 …

Share