அசுரவதம் – படம் எப்படி?

அசுரவதம் – படம் எப்படி?

இயக்கம் : மருதுபாண்டி

நடிப்பு : சசிகுமார்

வசுமித்ர

நந்திதா

நமோ நாராயணன்

ஒளிப்பதிவு : SR கதிர்

படத்தொகுப்பு :கோவிந்தராஜ்

இசை : கோவிந்த்

தயாரிப்பு : செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்

நீளம் : 122 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் : திண்டுக்கலில் மளிகைக்கடை நடத்தும் சமயனுக்கு (வசுமித்ர) தொடர்ந்து கொலைமிரட்டல் விடுகிறார் சரவணன்(சசி). யார் இந்த சரவணன்? ஏன் கொலை செய்ய துடிக்கிறான்? அவனின் பின்கதை என்ன? ஆகியவற்றை விவரிக்கிறது திரைக்கதை.

 

பலம் …

 

+ ஒளிப்பதிவு : வழக்கமான பழிவாங்கல் கதைக்கு  புதிய திரைவடிவத்தை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் SR கதிர். முதல் பாதியில் வரும் இரவு நேர காட்சிகள், மின்னல் வெளிச்சத்தில் வரும் முதல் சண்டைக்காட்சி, வகை வகையான சேசிங் காட்சி, கழுகுப்பார்வை டிரோன் கோணம் என்று பல்வேறு கோணங்களில் இவரது கேமரா கண்ணை கவர்கிறது

 

+ சண்டைக்காட்சி : தொடக்கம் முதல் முடிவு வரை, திரைக்கதையில் சண்டைக்காட்சி ஒரு அங்கமாகவே பயணிக்கிறது. படத்தில் வரும் பல்வேரு திருப்பங்கள், சண்டைகாட்சிகளின் இடையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இடையிடையே பல்வேறு சர்வதேச படங்களின் பாதிப்பு தென்பட்டாலும், திலிப் சுப்புராயனின் பங்கு பாராட்டிற்குரியது.

 

+ இசை : Tuning Fork’கை அடிப்படையாகக்கொண்ட பல்வேறு சப்தங்களில்  பின்னணியிசையை கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த். காட்சிகளின் ஆழத்திற்கு ஏற்ப பயணிக்கும் பின்னணியிசை படத்திற்கு பெரிய பலம்.

 

+ கதாபாத்திரங்கள் : ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு நன்று. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இவர்கள் தொலிலேயே பயணிப்பதால், திரைக்கதையின் ஓட்டம் சீராக பயணிக்கிறது.

 

பலவீனம் …

 

– திரைக்கதை : அதி மெதுவாகவும், நன்கு கணிக்கும்படியும் பயணிக்கும் திரைக்கதை, படத்திற்கு பெரும் பலவீனம். முக்கிய திருப்பமாக ஹீரோவின் முன்கதையை இறுதிக்கட்ட காட்சிகளூடே இணைந்திருப்பது கிளைமாக்ஸ் காட்சிக்கு பலமாக இருந்தாலும், திரைக்கதை அளவில் அது இழுவை.

 

–  செய்யக்கைத்தனம் : ஆரம்ப காட்சியான போன் காட்சி முதல் படத்தில் பல்வேறு இடங்களில் செயற்கைத்தன்மை மேலோங்கி காணப்படுகிறது. குறிப்பாக, ஹீரோ வில்லன் அருகில் சென்று பின்னர் அவரை விட்டுவைக்கும் காட்சிகள் திரும்ப திரும்ப வருவது சலிப்பு.

 

சிறப்பு தோற்றத்தில் நந்திதா என்று சொல்லுமளவிற்கு உள்ளது அவரது கதாபாத்திரம். நமோ நாராயணின் நகைச்சுவைகள் முதல்பாதியோடு முடித்துவைக்கப்பட்டது நன்று, பெரிதாக எடுபடவில்லை. காட்டிடத்திலிருந்து நிலைதடுமாறி விழும் காட்சியில் ‘சசியா இது?’ என்று சந்தேகிக்கும் அளவிற்கு நன்றாக நடித்திருக்கிறார் சசிகுமார்.

 

* வில்லனின் கடை, தற்காலிக காட்சிகளில் ஒரு இடத்திலும், முன்கதையில் வேறு இடத்திலும் இருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் குழப்பம்.

*ஹீரோ வில்லனின் இருப்பிடத்தை கண்டறிவது எப்படி?.

 

இப்படி படத்தின் இடையே சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடிவதில்லை. இருந்தும், காலம், நேரம் ஆகியவற்றை எந்த காட்சியிலும் குறிக்காமல், இது எல்லா காலகட்டத்துக்கும் பொருந்துமாறு படமாக்கப்பட்டது கூடுதல் சிறப்பு. சர்வதேச பழிவாங்கல் படத்திற்கு இணையான ஒரு முயற்சியை எடுத்தமைக்காகவே இயக்குனர் மருதுபாண்டியனை பாராட்டலாம்.

 

மொத்தத்தில் : தேர்ந்த தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இப்படம், திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால், ‘சிறந்த படம்’ எனும் அந்தஸ்தை பெற்றிருக்கும். இருப்பினும், சண்டைகாட்சிகளுக்காகவும், தொழில்நுப்ப சிறப்பிற்காகவும் ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்.

 

மதிப்பீடு : 3 / 5 …

Share