டிராபிக் ராமசாமி – படம் எப்படி ?

டிராபிக் ராமசாமி – படம் எப்படி ?

இயக்கம் : விக்கி

நடிப்பு : S.A.சந்திரசேகர்

ரோகினி

RK.சுரேஷ்

மனோபாலா

அம்பிகா

இமான் அண்ணாச்சி

மோகன் ராமன்

சேத்தன்

அம்மு

விஜய் ஆன்டனி (சிறப்புத் தோற்றம்)

விஜய் சேதுபதி (சிறப்புத் தோற்றம்)

பிரகாஷ்ராஜ் (சிறப்புத் தோற்றம்)

ஒளிப்பதிவு : குகன்.எஸ்.பழனி

படத்தொகுப்பு : பிரபாஹரின்

இசை : பாலமுரளி பாலு

தயாரிப்பு : கிரீன் சிக்னல்

நீளம் : 119 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் :வாழும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி அவரின் வாழ்க்கை பக்கங்களில் நடந்த நிகழ்வுகளின் கோர்வையே இப்படம்.

 

பலம் …

 

+நடிகர்கள் தேர்வு : டிராபிக் ராமசாமியை நம் கண்முன்னே கொண்டுவருகிறார் S.A.சந்திரசேகர், இவரின் உடல் உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது. அவரது மனைவியாக ரோகினி, பொருத்தம். உணர்ச்சிபொங்கும் காட்சிகளில் இவரது நடிப்பு அருமை. இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை.

 

+ சமூக விழிப்புணர்வு காட்சிகள் : படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள், நிஜ சம்பவங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. ராமசாமி அவர்கள் தொடுத்த பெரும்பாலான வழக்குகளின் தீர்ப்பு நாம் எளிதில் கேள்விப்படாததால், அவற்றின் ஊடே இருக்கும் சமூக எண்ணங்கள் நமக்கு பல விழிப்புணர்வுகளை கொடுக்க வல்லது

 

+ இசை : பாலமுரளி பாலு’வின் இசை பல இடங்களில் மென்மையாகவும், சில இடங்களில் அதிரடியாகவும் அமைந்துள்ளது. மெண்மையான காட்சிகளில் இருக்கும் பின்னணி இசையின் ஆழம், அதிரடி காட்சிகளில் காணாமல் போகிறது. இருந்தும், பாடல்களும் பின்னணி இசையும், படத்திற்கு ஓரளவு கைகொடுத்து இருக்கிறது.

 

பலவீனம் …

– திரைக்கதை : நிஜ சம்பவங்களின் கோர்வையை கதையாக்குவது கடினம் தான் என்றாலும், படத்தை ஆவணப்பட தொனியில் கொண்டுசெல்வதா? அல்லது கமற்சியல் கலப்பதா? என்பதில்  இயக்குனருக்கு மிகப்பெரிய குழப்பம் இருந்திருக்கக்கூடும் என வினைகிறேன். திரைக்கதையில்  அதீத நாடகத்தனம்.

 

– மசாலா திணிப்புகள் : ராமசாமி அவர்களை கமர்சியல் ஹீரோவாக்கும் வண்ணம் பல காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. மேலும் அவருக்கு பிரபலங்கள் உதவிசெய்வதாக சித்தரிக்கப்படும் காட்சிகள் அனைத்தும் அபத்தம். விஜய் ஆன்டனி, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களின் சிறப்புத்தோற்றம், படத்தை எந்தவிதத்திலும் காப்பாற்றவில்லை.

 

குகன்.எஸ்.பழனி அவரின் ஒளிப்பதிவும், பிரபாஹரின் படத்தொகுப்பும் சுமார் ரகம். ராஜசேகரின் வசனங்கள் சில இடங்களில் நச், பல இடங்களில் நச்சரிப்பு. நீதிமன்ற காட்சிகளுள், மனோபாலா மற்றும் அம்பிகா அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் மனதில் நிலைக்கிறது. பேத்தி கதாபாத்திரத்தில் வரும் குழந்தை வசீகரிக்கிறார். RK.சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அக்மார்க் சினிமாத்தனம்.

 

படம் ஆரமித்த சிலநொடிகளில் தெரியும் ஆவணப்பட ஐயர்ப்புகளும், சீரியல் பணியில் வரும் குடும்ப காட்சிகளும் ஒரு அளவிற்கு மேல் ரசிகர்களை சோதிக்கிறது. எந்த பிடிப்புமில்லாமல் செல்லும் முதல்பாதி திரைக்கதையே இதற்க்கு காரணம். இமான் அண்ணாச்சி, மோகன் ராமன் ஆகியோரை முன்வைத்து நகரும் இரண்டாம்பாதி காட்சிகளில் நாடகத்தனம் தூக்கல், அதனுள்  லேடி போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் உச்சக்கட்டம். ‘ஒரு எளிமையான, நாடகத்தனமற்ற ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்ய இதனை நாடகத்தனமா?’ என மலைக்க தோன்றியது. பல இடங்களில் இயக்குனரின் இக்கதையைப்பற்றிய புரிதலில் ஐயம் எழாமல் இல்லை.

 

மொத்தத்தில் : அதீத நாடகத்தனத்தையும், பழமை சார்ந்த கமர்ஷியல் திணிப்புக்களையும் தவிர்த்திருந்தால், தவிர்க்கமுடியாத ஒரு படமாக இப்படம் மாறியிருக்க அதீத வாய்ப்புகள் இருந்தும், கோட்டை விட்டு இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

மதிப்பீடு : 2 / 5 …

 

Share