செம – படம் எப்படி ?

செம – படம் எப்படி ?

இயக்கம் : வள்ளிகாந்த்
நடிப்பு : GV பிரகாஷ்ராஜ்
அர்த்தனா பினு
யோகிபாபு
கோவை சரளா
மன்சூர் அலிகான்
சுஜாதா சிவகுமார்
ஒளிப்பதிவு : விவேக் ஆனந்த்
படத்தொகுப்பு : பிரதீப்.இ.ராகவ்
இசை : GV பிரகாஷ்ராஜ்
நீளம் : 123 நிமிடங்கள்.

 

கதைச்சுருக்கம் : ஹீரோ குழந்தைக்கு (GV பிரகாஷ்) ஜோதிடர் சொன்ன 3 மாத கெடுவுக்குள் கல்யாணம் முடிக்க திட்டமிடும் அவரது அம்மாவும், குழந்தையின் தோழன் ஓமகுண்டம் (யோகிபாபு) தீவிரமாக முயற்சிக்க, தற்செயலாக மகிழினியிடம் (அர்த்தனா) காதலில் விழுகிறார் குழந்தை. பின்னர் வரும் சம்பவங்களின் கோர்வையே படத்தின் திரைக்கதை.


பலம் …

+ ஒளிப்பதிவு : ஆரம்பம் முதல் இறுதிவரை கண்களுக்கு ‘கலர்’ விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த். குறிப்பாக, பாடல்காட்சிகளில் கூடுதலாக மிளிருகிறது இவரது கேமரா.

+ யோகிபாபு : படம்நெடுக வரும் இவரது காமெடி பஞ்ச்’கள் படத்திற்கு பெரும் பலம். அங்கங்கே தொய்வுறும் திரைக்கதையில் இவரது காமெடி ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல்.

 

பலவீனம் …

– திரைக்கதை : 2 மணி நேரமே ஓடும் திரைக்கதையில், பெரும்பாலும் தோவுகள் எட்டிப்பார்பது படத்திற்கு பெரும் பலவீனம். கிளைமாக்ஸ் முடிந்தும் 40 நிமிடங்கள் படம் ஓடுவது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.

– கதாபாத்திர வடிவமைப்பு : கோவைசரளா, மன்சூர் அலிகான், சுஜாதா போன்ற சீனியர் நடிகர்கள் இருந்தும், இவர்களின் கதாபாத்திரங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. GV பிரகாஷ் மற்றும் அர்த்தனா இடையேயான காட்சிகள் நன்றாக இருந்தாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகள் அவற்றை மழுங்கடித்து விடுகிறது. கடைசீ வரை வந்து ஒன்றுமே செய்யாமல் வில்லன் கதாபாத்திரம், விரலுக்கு இறைத்த நீர்.

‘சண்டாளி’ பாடல் நன்று, GV பிரகாஷ்’ன் பின்னணி இசையில் மெத்தனம் பளிச்சிடுகிறது. திரும்ப திரும்ப வரும் பெண் பார்க்கும் காட்சிகள், பெண் கிடைத்தபின் GV பிரகாஷ் செய்யும் சேட்டைகள், மன்சூர்’ரின் கோமாளித்தனமான நடிப்பு என்று ரசிகர்களை ஒரு பக்கம் கடுப்பேற்றினாலும், மறுமுனையில் அழகிய காதல் காட்சிகள் வழியே ரசிகர்களை வருட முயற்சித்து இருக்கும் இயக்குனர் வள்ளிகாந்த்’தின் முயற்சி அவ்வளவாக பயனளிக்கவில்லை. இயக்குனர் பாண்டிராஜ்’ன் வசனங்கள் ஏமாற்றமளிக்கிறது.

மொத்தத்தில் : இழுவையான கடைசி 20 நிமிட காட்சிகள், ஒரே மாதிரியான முதன்மை காட்சிகள் ஆகியவற்றை குறைத்து, மேலும் சுவாரசியம் கூட்டி இருந்தால் நிஜமான ‘செம’ ஆகியிருக்கும்.

மதிப்பீடு : 2.5 / 5 …

Share