காளி – படம் எப்படி ?

காளி – படம் எப்படி ?

இயக்கம் : கிருத்திகாஉதயநிதி

நடிப்பு : விஜய் ஆன்டனி

                 யோகிபாபு

                 அம்ரிதா அய்யர்

                 ஷில்பா மஞ்சுநாத்

                  அஞ்சலி

                  சுனைனா

                  நாசர்

                  ஜெயப்ரகாஷ்

                  மதுசூதன் ராவ்

ஒளிப்பதிவு : ரிச்சர்ட்.M.நாதன்

படத்தொகுப்பு : லாரன்ஸ்கிஷோர்

இசை : விஜய்ஆன்டனி

தயாரிப்பு : விஜய்ஆன்டனி

நீளம் : 133 நிமிடங்கள்

கதைச்சுருக்கம் : அமெரிக்க வாழ் மருத்துவரான காளிக்கு (விஜய் ஆன்டனி), அடிக்கடி ஒரு கேட்ட கனவு அவரை தொந்தரவு செய்கிறது. ‘தான் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைஎன்றும் தெரிந்துகொண்ட காளி, தன் நிஜ அப்பா அம்மாவைத்தேடி இந்தியா வருகிறார். பின்னர் நடக்கும் நிகழ்வுகளே படத்தின் திரைக்கதை.

பலம்

+ இசை : கதையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பிளஷ்பேக், அதற்கேற்ப ஒரு பின்னணி இசை, என்று இசையில் பல்வேறு கோணங்களை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய் ஆன்டனி. பாடல்கள் சுமார்.

+ ஒளிப்பதிவு : வேவ்வேறு பிளஷ்பேக்கிற்கேற்ப ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றாற்போல்கலர் டோன்னில் ஒளிப்பதிவு செய்து கவனிக்க வைக்கிறார் ரிச்சர்ட்.M.நாதன்.

பலவீனம்

திரைக்கதை : படம் ஆரமித்தது முதல், முடியும் வரை ஒரே இடத்தில சுற்றும் திரைக்கதை, படத்திற்கு பெரிய பலவீனம். பெரிய திருப்பங்களும் இல்லாமல், ஒரே சீராக பயணிக்கும் திரைக்கதை நம்மை எந்த விதத்திலும் சுவாரசிய படுத்தவில்லை.

கதாபாத்திரங்கள் : இறுதிவரை நம்முடன் சேர்ந்து கதையை மட்டுமே கேட்கும் கதாநாயகன், ஏன் என்றே தெரியாத வண்ணம் வந்துபோகும் கதாநாயகிகள், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் முக்கிய கதாபாத்திரங்கள் என்று எழுத்தாளவிலேயே மிகவும் பலவீனமாக தெரிகிறது இப்படத்தின் கதாபாத்திரங்கள்.

தவிர, period தொனியில் வரும் பிளஷ்பேக் கட்சிகளுக்கு சரியான காலக்குறியீடோ, அதற்கேற்ற பின்னணியிலோ இயக்குனர் அதிகம் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. கல்லூரி காட்சிகளில் வரும் ரோமியோஜூலியட் நாடகம், கொலைகாரனின் கதை, அஞ்சலி சார்ந்த காட்சிகள் அனைத்திலும் பழமை சாயல் அதிகம்.

மொத்தத்தில் : காட்சியமைப்பிலும், திரைக்கதை அளவிலும் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் ஒரு பேர்சொல்லும் படமாக வந்திருக்கும் இந்த காளி.

மதிப்பீடு : 2.25 / 5 …

Share