ஏமாலி – படம் எப்படி ?

ஏமாலி – படம் எப்படி ?

இயக்கம் : VZ துரை

நடிப்பு : சமுத்திரக்கனி

சாம் ஜோன்ஸ்

அதுல்யா

ரோஷினி

பாலசரவணன்

சிங்கம்புலி

ஒளிப்பதிவு : M.ரித்தீஷ்கண்ணா

IJ.பிரகாஷ்

படத்தொகுப்பு : R. சுதர்ஷன்

இசை : சாம்.D.ராஜ்

தயாரிப்பு : M.லதா (Latha Productions)

நீளம் : 146 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் :

காதல் ஜோடியான ரீத்து (அதுல்யா) மற்றும் மாலீஸ்வரன் (சாம் ஜோன்ஸ்) இருவருக்கும் ஏற்படும் ஒரு மனஸ்தாபத்தால், இருவரும் பிரிந்துவிடலாம் என்ற ரீத்துவின் கூற்றை ஏற்காத மாலி, தன் நலம் விரும்பியான அரவிந்த் (சமுத்திரக்கனி) உதவியுடன், ரீத்துவை கொல்ல முடிவெடுக்கிறான். பின்னர் வரும் நிகழ்வுகளே திரைக்கதை.

 

பலம் . . .

+ கதைக்கரு : ஸ்வாதி கொலை வழக்கு உட்பட பல நிஜ சம்பவங்களை நினைவுபடுத்தும் கதைக்கருவும், அதை சுற்றி வரும் காட்சிகளும், படத்திற்கு பலம்.

 

+ சமுத்திரக்கனி : வழக்கமாக செய்யும் அறிவுரையை புது கெட்டப்பில் வந்து சொல்கிறார் சமுத்திரக்கனி. இவரின் அரவிந்த் கதாபாத்திரம், ஹீரோ கதாபாத்திரத்தை காட்டிலும் வலுப்பெற்றதாக அமைந்திருக்கிறது.

 

+ ஒளிப்பதிவு : சில இடங்களில் ஆங்கிலப்படங்களை நினைவுபடுத்தும் M.ரித்தீஷ்கண்ணா மாற்றும்  IJ.பிரகாஷின் ஒளிப்பதிவு பலம். படம் வெவ்வேறு தளத்தில் பயணிக்கும்பொழுது, கலர் மாறுதல்கள் மூலம் அழகாக அதை அழகாக வேறுபடுத்தி இருக்கிறார்கள்.

 

பலவீனம் . . .

– படத்தொகுப்பு : பல்வேறு தலத்தில் பயணிக்கும் Non-Linear திரைக்கதைக்கு, பெரும்பாலும் குழப்பத்தை மட்டுமே விதைக்கிறது. பல்வேறு உணர்வுகளை தாங்கும் காட்சிகள் கலந்துகட்டி வருவதால், படத்தின் தன்மையைப்பற்றிய ஐய்யம் ரசிகர்களுக்கு தோன்றுவதை தவிர்க்கமுடிவதில்லை.

 

– திரைக்கதை : முழுமையான காதல் படமாகவும் இல்லாமல், த்ரில்லர் படமாகவும் இல்லாமல், மதில்மேல் பூனையாக நடுவில் நிற்கிறது திரைக்கதை. பெரிய திருப்பங்கள் இல்லாமல், மெதுவாக செல்லும் திரைக்கதை ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.

 

– இசை : பல ஆங்கில மற்றும் தமிழ் படங்களில் கேட்ட இசையை பின்னணி இசையாக கலந்துகட்டி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.D.ராஜ். பாடல்கள் சோபிக்கவில்லை.

 

சமுத்ரகனியும், சாம் ஜோன்ஸும் சேர்ந்தே படத்தின் பல கதாபாத்திரங்களை நடித்து முடித்தமையால், மற்ற நடிகர்களுக்கு பெரும்பாலும் குட்டி கதாபாத்திரங்கலையே ஏற்று நடித்தார்கள். பாலசரவணன், சிங்கம்புலி ஆகியோரின் காமெடி சுமார் ரகம். சமுத்ரகனியின் ஜோடியாக நடித்திருக்கும் ரோஷினி பரவாயில்லை. அதுல்யா, அவ்வப்போது வந்து போகிறார். ஹீரோ சாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் சராசரி மனிதனா?, இல்லை மனநோயாளியா? என்ற தெளிவில்லை.

 

முதல் 20 நிமிடங்கள், comic புத்தகம் படிக்கும் உணர்வை கொடுத்தாலும், மீதமிருக்கும் படம் எப்படிப்பட்ட உணர்வை கொடுத்தது என்று வர்ணிக்க முடியாத, இரண்டாம் கட்ட உணர்வையே தருகிறது. காதல் கதைக்கு ஒற்று பயணிக்கும் திரில்லர் கதைக்கு, கொஞ்சம் கூட வலு சேர்க்காத கிளைமாக்ஸ், படத்தில் வரும் ஒட்டுமொத்த திரில்லர் காட்சிகளையும் கேலி கூத்தாக்கி விடுகிறது. பல நல்ல படங்களை தந்த VZதுரை, இம்மாதிரியான கதையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் விளங்கவில்லை.

 

மொத்தத்தில் : திரைக்கதையின் நிதானப்போக்கையும், கட்சிகளின் திடீர் தன்மை மாற்றங்களையும் பொறுத்துக்கொண்டால், இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

 

மதிப்பீடு  : 2 / 5 . . .

Share