இப்படை வெல்லும் – படம் எப்படி ?

இப்படை வெல்லும் – படம் எப்படி ?

இயக்கம் : கவுரவ் நாராயணன்

நடிப்பு : உதயநிதி ஸ்டாலின்

மஞ்சிமா மோகன்

சூரி

டேனியல் பாலாஜி

RKசுரேஷ்

ரவிமரியா

.                ராதிகா

 

இசை : D.இமான்

ஒளிப்பதிவு : ரிச்சர்ட்.M.நாதன்

படத்தொகுப்பு : . பிரவீன்.KL

தயாரிப்பு :Lyca  productions

நீளம் : 140 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் : சிறையிலிருந்து தப்பிவரும் தீவிரவாதி சோட்டா (டேனியல் பாலாஜி),  சென்னையில் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிடுகிறான். அவனைப்பற்றி தெரியாமல் அவனுக்கு சிறு உதவிகள் செய்த மதுசூதனன் (உதய்), குழந்தைவேலு (சூரி) இருவரையும் தவறுதலாக போலீசார் கைதுசெய்ய, மேற்படி நடப்பவைகளை விவரிக்கிறது திரைக்கதை.

 

#Thanks card’க்கு முன்னரே டைட்டில் போட்டு படத்த ஆரமிச்ச விதத்துலயே வித்தியாசத்த காட்டி இருக்குற #இயக்குனர்_கவுரவ், முதல் 20 நிமிஷத்த அத உறுதி படுத்தி, நம்மளோட எதிர்பார்ப்ப எகிறவிட்டு இருக்காரு. பின்னாடியே வர்ற காதல், செண்டிமெண்ட்  காட்சிகள் கொஞ்சம் நிதானமா நகர்ந்தாலும், பெருசா போர் அடிக்கல்லை. இடைவேளை காட்சி சுவாரசியமாவே இருந்தாலும், இடைவேளைக்கு பின்னாடி வர்ற காட்சிகள் ஏகத்துக்கு வந்து போய் நம்ம பொறுமைய சோதிக்க, கடைசி 30 நிமிட காட்சிகள் சுவாரசியமா நகர, வித்யாசமான கிளைமாக்ஸ்’சுடன் விடைபெறுகிறது படம்.

 

பலம் …

 

+ டேனியல் பாலாஜி : டேனியல் பாலாஜி வர்ற காட்சிகள் தான் படத்துக்கு அடிநாதம்ன்னு சொல்லலாம், மொத்த படத்துலயும் இந்த மனுஷன் மட்டும் தனியா தெரியிறாரு. உதயநிதி வர்ற காட்சிகள விட, இவரு வர்ற காட்சியத்தான் சுவாரசியமா இருக்கு.

 

+ஒளிப்பதிவு : அதிகப்படியான #Google_map, #Drone காட்சிகள் ஹரி படங்கள ஞாபகப்படுத்தினாலும், வித்யாசமான கேமரா கோணங்கள், புதுமையான #Shot-divisions’ன்னு பின்னி எடுத்து இருக்காரு ஒளிப்பதிவாளர் #ரிச்சர்ட், அப்போ அப்போ மங்களா தென்படுற ஒரு சில shots கண்ண உறுத்துது.

 

+ படத்தொகுப்பு : Scene’க்கு இடையில வர்ற #Continuityshot’கல பிரமாதமா தொகுத்து இருக்காரு பிரவீன்KL. கூடவே, படம் முழுக்க வர்ற #Timeline’அ மனசுலவெச்சி அதுக்கேத்த மாதிரி காட்சிகள தொகுத்த விதம் சிறப்பு.

 

பலவீனம் …

 

– இரண்டாம்பாதி : இடைவேளைக்கு பின்னர் வர்ற கடைசீ வர்ற 40 நிமிஷ காட்சிகள்ல ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருக்குறதோட, கதைக்கு அந்நியமா தெரிஞ்சுது. குறிப்பா, சூரியோட #hypnotherophy காட்சி

 

– இசை : பாடல்கள் பெருசா எடுபடலை. குறிப்பா இரண்டாம்பாதி செண்டிமெண்ட் பாடலை அப்படியே தூக்கி இருக்கலாம். D.இமான்’னுடைய பின்னணி இசை சுமார் ரகம்.

 

RKசுரேஷ், ரவிமரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் வேற காமெடி படத்துல இருந்திருந்தா ரசிச்சி இருக்கலாம். RKசுரேஷ்’ஷ பாத்தாலே சிரிப்பு தான் வருது.மஞ்சிமா’வுக்கு நல்ல கதாபாத்திரம், செம்மையை செஞ்சி இருக்காங்க. உதயநிதி வழக்கம்போல வந்து போய் இருக்காரு. #ராதிகா கதாபாத்திரம் முதல்பாதியில நல்லா இருக்கு. சூரி’யுடைய காமெடி காட்சிகள விட, செண்டிமெண்ட் காட்சிகள் நல்லா வந்திருக்கு.

 

கவுரவ்’வுடைய எழுத்து படத்துக்கு பெரிய பலம், அவரோட #Making நல்லாவே இருந்தாலும், திரைக்கதைல வர்ற சில கேள்விகளும், தொய்வுகளும் திரிஷ்டி பொட்டா அமைஞ்சி இருக்கு. உதாரணத்துக்கு,

 

* உதய் – சூரி’ய commissioner அலுவலகத்துக்கு போற வழியில நடக்குற விபத்துக்கு எந்த அடிப்படையுமே இல்ல. வெடிகுண்டு supplier ஏன் அந்த இடத்துல வந்து, ஏன் போலீஸ் வண்டிய இடிக்கும்?.

 

மொத்தத்துல : இரண்டாம்பாதி சறுக்கல்கள நீங்க பெருசா கண்டுக்கலைன்னா, இந்த படம் உங்கள கண்டிப்பா திருப்தி படுத்தும். ஒரு முறை தாராளமா பாக்கலாம்.

 

RATING : 3 / 5 …

Share