அவள் – படம் எப்படி ?
இயக்கம் : மிலிண்ட்
எழுத்து : மிலிண்ட்
சித்தார்த்
நடிப்பு : சித்தார்த்
ஆண்ட்ரியா
அதுல் குல்கர்னி
ஹனிபா
இசை : கிரிஷ்
ஒளிப்பதிவு : ஷ்ரேயஸ் கிருஷ்ணா
படத்தொகுப்பு : லாரன்ஸ்கிஷோர்
தயாரிப்பு : சித்தார்த்
நீளம் : 137 நிமிடங்கள்.
கதைச்சுருக்கம் : Dr.கிருஷ்ணகுமார் (சித்தார்த்) மற்றும் Dr.Paul (அதுல் குல்கர்னி), அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் இரு வீட்டாரின் குடும்ப உறுப்பினர்களுக்குள் நிகழும் அமானுஷ்ய அனுபவங்களும், அவற்றை இணைக்கும் 33 வருட சூரிய கிரகண பின்கதையுமே படத்தின் கரு.
முதல்பாதி மெதுவா நகர்ந்தாலும், ஒரு நேர்கோட்டுல நகருற திரைக்கதை, இடைவேளைல நமக்கு மரண பயத்த காட்டிட்டுது, நாம எதிர்பார்த்த முடிவையே தர்ற இரண்டாம்பாதி ரொம்பவும் மெதுவா நகருறதோட, முடிவுல நடக்குற நிகழ்வுகள்ல பல குழப்பங்கள உண்டு பண்ணிட்டு முடியுது படம். இடையில 10 காமெடி சீன், மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, அம்மன் பாட்டுன்னு எந்த சேஷ்டையும் செய்யாம, கதைக்கு தேவையானத மட்டுமே சொன்னதுக்கே இயக்குநர் மிலிண்ட் ராவ்‘க்கு முதல் பூங்கொத்து.
பலம் . . .
+ ஒளிப்பதிவு : தலைகீழா நடக்குற காட்சிகள், தலைக்குமேலே Trolley போல நகருற காட்சி, வீட்டுக்குள்ள உபயோகிச்ச லைட்டிங் எல்லாமே உலகத்தரம், ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணா‘வுக்கு பாராட்டுக்கள்.
+ இசை : எல்லா இடத்துலயும் நிரப்பாம, தேவையான இடத்துல மட்டும் இசைக்குற கிரிஷ்‘ஷுடைய பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம். முதல்பாதியில ஒரு முக்கியமான காட்சியில Metronome (டிக் டாக் கருவி) சதத்த மட்டுமே வெச்சி திகில கிளப்பி இருப்பாங்க, கூடவே பல இடங்கள்ல சப்த அமைப்பு பிரமாதம்.
+ எழுத்து : படத்தோட துவக்கத்துல வர்ற சித்தார்தோட அறுவைசிகிச்சை காட்சி தொடங்கி, பல காட்சிகள்ல எழுத்து ஒரு பெரிய பலமா அமஞ்சி இருக்கு. சில இடங்கள்ல காட்சி அமைப்பாகவும், சில இடங்கள்ல வசனமாகவும் ஒரு பெரிய உழைப்பு வெளிப்படையா தேறியுது.
+ கதாபாத்திர தேர்வு : சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உட்பட எல்லா நடிகர்களும் அவர்களோட பங்க சரியா செஞ்சி இருக்காங்க. ஜெனிபர் கதாபாத்திரத்துல வர்ற #ஹனிபா கலக்கி இருக்காங்க.
பலவீனம் . . .
– திரைக்கதை : படம் நெடுக மெதுவா நகருற திரைக்கதை படத்துக்கு பெரிய பலவீனம். குறிப்பா, இரண்டாம்பாதி காட்சிகள் நம்ம யுகத்தின்படியே நகருறதால, திருப்பங்கள் பெரிய அதிர்வுகள எற்படுத்தலை.
– படத்தொகுப்பு : 137 நிமிடங்கள் ஓடுற படத்தோட நீளத்த, 120க்குள் அடக்கி இருந்தா, திரைக்கதை இன்னும் அழுத்தமாவும், சுருக்கமாவும் அமைந்து இருக்கும். படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் இதை கவனிச்சு இருக்கலாம்.
எல்லா Bilingual படத்துல வர்ற கலாச்சார குழப்பம் இந்த படத்துலயும் இருக்கு, கதை நடக்குற இடம் நமக்கு அந்நியமா தெரியுது. கூடவே, ஹிந்திக்காக சேத்திருக்க படுக்கையறை காட்சிகள் நம்மவூரு ஜனங்கள நெளியவைக்குது. வன்முறை காட்சிகள கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.
மொத்தத்துல : இரண்டாம் பாதி திரைக்கதையில கூடுதல் கவனம் செலுத்தி இருந்தா, இந்த படத்தோட தரம் மேலும் கூடி இருக்கும். மத்தபடி, ‘அவள்‘ ஒரு மேல்தர தொழில்நுட்பம் நிறைந்த ஒரு சராசரி படம்.
RATING : 2.75 / 5 . .





![இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படம் இன்ஃபிளுன்செர். [ INFLUENCER ]](http://www.shruti.tv/wp-content/uploads/2025/08/mov_infu-220x180.jpg)







Social