புரியாத புதிர்  – படம் எப்படி ?

புரியாத புதிர் – படம் எப்படி ?

இயக்கம் : ரஞ்சித் ஜெயக்கொடி

நடிப்பு  : விஜய் சேதுபதி

        காயத்ரி

        மஹிமா நம்பியார்

        ரமேஷ் திலக்

ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்

படத்தொகுப்பு : பவன் ஸ்ரீகுமார்

இசை : C.S. சாம்

தயாரிப்பு : J.சதிஷ் குமார்

          தீபன் பூபதி

நீளம் : 122 நிமிடங்கள்

 

நவீன தொழில்நுட்பத்தின் நடுவே வாழும் நமக்குள், ரகசியம் என்பது கோமாளித்தனம்,

இரு கண்களின் வழியே மட்டுமே உலகத்தை காணும் நம்மை, பலநூறு கண்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றன‘, என்பதை உணர்த்த முயற்சிக்கிறது புரியாத புதிர்.

 

கதைச்சுருக்கம் : இசையமைப்பாளர் கதிரும், இசைக்கல்லூரி ஆசிரியை மீராவும், காதலிக்க ஆரமித்து சிறிது நாட்களில், கதிருக்கு மீராவின் ரகசிய ஆபாச வீடியோ ஒன்று  செல்போனில் வர, இருவரின் வாழ்க்கையிலும் நிம்மதி குலைகிறது. அந்த ரகசிய விடியோவின் பின்புலத்தையும், அதில் கதிர்மீராவிற்கான சம்பந்தத்தையும் விளக்குகிறது திரைக்கதை.

 

122 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படத்தின், முதல் 30 நிமிடங்கள் காதல்காட்சிகளுக்கு கழிய, பின்னர் வேகமெடுக்கும் திரைக்கதையின் சூடு, இரண்டாம்பதியின் Flashback காட்சிவரை தொடர, பின்தொடரும் காட்சிகளில் வலுவிழந்து,  இறுதிக்காட்சியில் முழுவதுமாய் குலைந்து பயனற்று முடிகிறது.

 

பலம் . . .

+விஜய் சேதுபதி : 4 வருடம் முன்னர் நடித்திருந்ததால், நன்றாகவே மெலிந்து காணப்படுகிறார் சேதுபதி. அதிகம் அலட்டிகொல்லாமல் அமைதியாக, அதே நேரம் நுட்பமாகவும் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

+ ஒளிப்பதிவு : அப்பார்ட்மெண்ட் வெளிப்புற, Top Angle மற்றும் Low Angle  ஷாட்களில் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். படம் முழுவதும் வண்ணமயமாக காட்சிதருவது, கதைக்களத்தின் மீதுள்ள ரசிகர்களின் பாரத்தை குறைகிறது.

 

+ பின்னணி இசை : பாடல்கள் கொஞ்சம் சுமார் ரகமாக இருப்பினும், பின்னணி இசையில் அதை ஈடுகட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் C.S. சாம்.

 

பலவீனம்  . . .

ஹீரோயின் : முதல் காட்சி தொடங்கி, இறுதிக்காட்சி வரை ஒரே முகபாவனையோடு தென்பதும் காயத்ரி, படத்தின் மிகப்பெரிய பலவீனம். ஒரு சம்பவத்தின் முன்னரும் பின்னரும் ஒரே போல் ஒலிக்கும் அவரது பின்னணி குரல், சில சமயம் எரிச்சல்.

 

காதல் காட்சிகள் : காயத்ரிசேதுபதி காதல்காட்சிகளில் ஒரு வித செயற்கைத்தனம் படம் முழுக்க தொடர்வது அடுத்த பலவீனம்.  

 

இரண்டாம்பாதி : சராசரியாக ஓடினாலும், ஒருவித எதிர்பார்ப்பை தூண்டிய முதல்பாதியில் சாராம்சத்தை, பாதியிலேயே குறைத்துவிட்டது இரண்டாம்பாதி. இரண்டாமதியின் பிற்பகுதியில் போக்கும், கிளைமாக்ஸ் காட்சியும் திணிக்கப்பட்டதாகவே தோன்றுவதை தவிக்கமுடியவில்லை.

 

* இடையில் இரு காட்சிகளில் தோன்றும் ரமேஷ் திலக்கின் கதாபாத்திரத்துக்கும், அதன் நோக்கத்திற்கும், செயல்களுக்கும், திரைக்கதையின் எந்த இடத்திலும் விளக்கமில்லை.

 

* Flashback காட்சிகள் பொறுத்தவரை, 5 முக்கிய கதாபாத்திரங்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் செய்யவில்லை என்றாலும்,  முகத்தளவில் நன்றாக அறிமுகமானவர்களே. இருப்பினும் நிகழ்கால காட்சிகளில் ஒருவருக்கு ஒருவர் தெரியாததைப்போல் காட்டிக்கொள்ளும் இடத்தில வலுவிழக்கிறது திரைக்கதை.

 

சிறிது நேரமே தோன்றினாலும் மஹிமா நம்பியார்ரின் கதாபாத்திரம் தனித்து நிற்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் தங்கள் பங்கை செம்மையாக செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நீட்டி இருந்தாலும், போர் அடித்திருக்கும் திரைக்கதையை  பவன் ஸ்ரீகுமார், கச்சிதமாக தொகுத்திருக்கிறார். அபார்ட்மெண்ட் interior காட்சிகளில், கலை இயக்குனர் கவனிக்க வைக்கிறார்.

 

படத்தில் காட்டப்படும் செல்போன் சாதனங்களைப்போல், படத்தின் திரைக்கதையிலும் பழமை சாயல் ஏராளம் (2013′றிலும் இது பழமையாகவே தெரிந்திருக்கும்).  ரசிகர்களுக்கு பரிட்சயமான கதைக்களத்தையும், Flashback காட்சிகளையும், முடிந்த வரை சுவாரசியமாக முயற்சித்து இருக்கும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, அதில் பாதி வெற்றியை மட்டுமே கண்டிருக்கிறார். இறுதிக்காட்சியில் வரும் திருப்பங்கள் எதுவும் நம்பும்படியாக இல்லாததால், முடிவில் திருப்தியில்லை.

 

மொத்தத்தில் : சுமாரான கிளைமாக்ஸ் மற்றும் இரண்டாம்பாதி பாதியை கொஞ்சம் சரிசெய்திருந்தால், இந்தபுரியாத புதிருக்கு மேலும் சுவாரசியம் கூடி இருக்கும்.  

RATING : 2.25 / 5 . . .

Santhosh AVK

Share