நிபுணன் – படம் எப்படி ?

நிபுணன் – படம் எப்படி ?

டைரக்டர் : அருண் வைத்தியநாதன்

நடிப்பு : அர்ஜுன், பிரசன்னா, வரலக்ஷ்மி, வைபவ், ஸ்ருதி ஹரிதாசன், சுமன், சுஹாசினி, சேத்தன், மெட்ராஸ் நந்தகுமார்.

இசை : S.நவீன்                                                              

ஒளிப்பதிவு : அரவிந்த் கிருஷ்ணா

படத்தொகுப்பு : சதிஷ் சூர்யா

தயாரிப்பு : பேஷன்  ஸ்டுடியோஸ்

நீளம் : 127 min (2 மணி 7 நிமிடம்).

 

கதைச்சுருக்கம் : 16/12/2016 முதல் 25/12/2016 வரை நடக்கும் 4 கொலைகளும், அதற்கான காரணமும், அதைச்சுற்றி நிகழும் இந்த 10 நாள் நிகழ்வுகளே ‘நிபுணன்’.

ரஞ்சித் காளிதாஸ் என்ற CID officer’ரை மையம் கொண்டு ஓடும் இந்த  127 நிமிடம் psycho பழிவாங்கல் படலம், சராசரியான முதல்பாதியையும், இழுவையான இரண்டாம்பாதியையும் கொண்டது. இடைவேளை வரை சீராக செல்லும் திரைக்கதையில், இடையில் வரும் குடும்பக்காட்சிகள் பெரும் வேகத்தடை. கொலைக்கான காரணத்தை தேடும் இரண்டாம்பாதியின் முற்பாதி சீராக போக, பிற்பாதியில் தொடங்கும் சறுக்கல், கிளைமாக்ஸ் வரை நீள்கிறது.

 

பலம் . . .

+அர்ஜுன் – 150’ஆவது படத்திலும் இதனை பிரெஷ்ஷாக தெரியும் அர்ஜுன், நடிப்பிலும் அசத்துகிறார். Parkinson’னால் படிக்கப்படும் இடங்களில் பலமாக ஸ்கோர் செய்கிறார்.

 

+ ஒளிப்பதிவு – பகல் இரவு என்று கலந்து வரும் top angle Drone shot’களில்கவனிக்க வைக்கிறார் #ஒளிப்பதிவாளர்_அரவிந்த்_கிருஷ்ணா.  கொலைநடந்த 3 இடங்களையும் முறையே பச்சை, நீளம், சிகப்பு tone’னில் படமாக்கி இருப்பது நன்று. இடையிடையே தெரியும் 5D கேமரா காட்சிகள் உறுத்தல்.

 

+ பின்னணி இசை – பாடல்களில் விட்டதை, பின்னணி இசையில் பிடித்து இருக்கிறார் இசையமைப்பாளர் நவீன். படத்தின் theme music, காதுகளில் ரீங்காரமிடுகிறது.

 

+ வசனங்கள் – ஆரம்பத்தில் ஒட்டாமல் தெரியும் வசனங்கள், படஒட்டத்தில் சரியாகிறது. . படம் முழுக்க ஏழும் பல்வேரு சந்தேகங்களுக்கும், லாஜிக் ஓட்டைகளும் போகிற போக்கில் நமக்கு பதிலளிக்கிறது வசனங்கள்.

 

பலவீனம் . . .

– இரண்டாம்பாதி & கிளைமாக்ஸ் – முதல்பாதியில் கச்சிதத்தை காட்டி இருக்கும் படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா, இரண்டாம்பாதியை கொஞ்சம் சுருக்கி இருக்கலாம். செயற்கையான கிளைமாக்ஸ் காட்சி, படத்தின் முடிவு தெரிந்த பிறகும் பல நிமிடம் நீள்கிறது.

 

– வில்லன் – கிளைமாக்ஸ் வரை Build-Up செய்துவிட்டு, இறுதியில் ஒரு திடீரென ஒரு வளரும் நடிகரை எதிரில் நிற்கவைத்து அர்ஜூனுடன் சண்டைபோட விட்டிருப்பது, படத்தை பலவீனமாகும் செயல்.

 

* படத்தின் முக்கியமான கட்டத்தில், ஒரு பெண் கதாபாத்திரம், நடுவீட்டில் தவறி கூர்மையான ஒரு ஆயுதத்தின் மேல் விழுந்து இறந்துவிடுவாள். அந்த ஆயுதம் திடீரென எங்கிருந்து வந்தது?.

 

*  Parkinson’னால் பாதிக்கப்பட்டால், இடையில் வரும் நடுக்கம் நிற்க எவ்வளவு காலம் ஆகும்?. ஏனெனில், கிளைமாக்ஸில் நாயகனுக்கு ஏற்படும் நடுக்கம் சிறிது நேரத்திலேயே சரி ஆகி விடுகிறதே!!…

 

ஆரம்ப shoot out காட்சி தொடங்கி, பல இடங்களில் அர்ஜுனை சூப்பர் ஹீரோ வாகவே சித்தரிக்கப்படுவதால், எந்த பிரட்சனை வந்தாலும் left hand’டிலேயே deal செய்வார் என்று ரசிகர்கள் தெளிவாகிவிட்டனர். வரலக்ஷ்மி, பிரசன்ன இருவரும் படம் நெடுக தோன்றினாலும், நெறய காட்சிகளில் Atmosphere’க்கே உதவுகிறார்கள். frame’மில் நிறைந்து காணப்படுகிறார் வரலக்ஷ்மி. ‘மெட்ராஸ்’ நந்தகுமார், சுஹாசினி, சுமன், வைபவ், ஆகியோர்க்கு கொசுறு கதாபாத்திரங்கள், அவற்றை நிறைவாக செய்திருக்கிறார்கள். அர்ஜுனின் மனைவியாக வரும் ஸ்ருதி ஹரிஹரன் ‘க்கு ஓரிரு இடங்களில் lipsync பிரட்சனை.

 

சிறிது ஆழமாக யோசித்தால் noida’வில் நடந்த ‘தல்வார்’ இரட்டைக்கொலையின் மறு பிரதிபலிப்பாகவே தோன்றுகிறது இந்த படம். ஹீரோவிற்கு ஏற்படும் Parkinson’s disease, கொலையாளியின் பின்புறம் எழுதப்படும் 4 எண்கள், முகத்தில் மாட்டப்படும் விளங்குமுகம் என்று திரைக்கதையில் புதுமைகளை புகுத்த நினைத்த இயக்குனர் அருண் வைத்தியநாதன், அதை படமாக்கிய விதம், ஜெயசங்கர் காலத்து யுக்தி. குறிப்பாக இடைவேளை திருப்பத்தை கணிக்க சராசரியான சினிமா அறிவே போதுமானது. மேலும் படமாக்களில் சிறிது கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

 

மொத்தத்தில் : வலுவற்ற வில்லன் கதாபாத்திரம், பலவீனமான இரண்டாம்பாதியை சிறிது சரி செய்திருந்தால், மெருகேறி காணப்பட்டிருப்பான் நிபுணன்.

RATING : 2.25 / 5 ….

 

AVK Santhosh

 

 

 

Share