பண்டிகை – படம் எப்படி ?

பண்டிகை – படம் எப்படி ?

1999’ல் David Fincher இயக்கத்தில் வெளியான  #FIght_Club’பின் தமிழ் நீட்சியாக இப்படத்தை நீங்கள் கருதினால், உங்களுக்கு பாதி வாழ்த்துக்கள். மீதியை கனிக்க, சிறிது வெங்கட் பிரபு படங்களை பார்த்திருந்தாலே போதுமானது.

 

கதைச்சுருக்கம் :

பண்டிகை எனப்படும் வீதிச்சண்டையிலும் சூதிலும் அனைத்தையும் இழந்த முனியையும் (சரவணன்), வெளிநாட்டு வேலை மற்றும் பணத்தேவைக்காக பண்டிகையில் சண்டைபோட தயாராகும் வேலுவையும் (கிருஷ்ணா), திட்டம்போட்டு ஏமாற்றும் தாதாவிடமிருந்து (மதுசூதன ராவ்) பணத்தை கொள்ளையடிக்க இருவரும் சேர்ந்து திட்டமிடுகின்றனர். பின்னர் அரங்கேறுகிறது உண்மையான பண்டிகை.

சுமார் 131 நிமிடங்கள் ஓடும் திரைக்கதை, முதலில், #பண்டிகை எனப்படும் வீதிச்சண்டையும், அதைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் உரைக்கிறது. இடைவேளைவரை தம் பிடித்து நகரும் திரைக்கதை, ஏகப்பட்ட வில்லன்கள், பணத்திருட்டு என்று சுமக்கமுடியாமல் மெதுவாய் நகர்ந்து, இறுதிக்கோட்டை ஒருவழியாக தொட்டுவிடுகிறது.

 

நிறைகள் . . .

+ பண்டிகை சண்டை – பண்டிகை சண்டை காட்சிகளும், அதற்கான திரைக்கதை விவரங்களும், படத்திற்கு பெரிய பலம்.

+ சில பாத்திர வடிவமைப்புகள் – முந்திரி என்கிற நிதின்சத்யா பாத்திரம், முனி என்கிற சரவணன் பாத்திரம் உட்பட பண்டிகை சண்டை தொடர்பான பாத்திரங்கள் நன்று.

+ ஒளிப்பதிவு – தொடக்கத்தில், ரூபா நாணயத்தை பின்தொடரும் காட்சி உட்பட சில காட்சிகளில் கவனிக்கும் ஒளிப்பதிவாளர் அரவிந்த். ஒளி குறைவான தியேட்டர் காட்சிகள் சிறப்பு.

+ பணத்திருட்டு காட்சிகள் – இரண்டாம் பாதி பணத்திருட்டு காட்சிகள், படத்தின் உச்சகட்ட பரபரப்பு. அதே பரபரப்பை படம் முழுக்க தெளித்து இருக்கலாம்.

 

குறைகள் . . .

– படத்தொகுப்பு – பண்டிகைச்சண்டையை மட்டும் மைய்யப்படுத்தாமல், பணக்கடத்தல், நிலஅபகரிப்பு, கிரிக்கெட் சூதாட்டம் என்று பலகோணங்களில் அலையும் திரைக்கதையை கட்டுப்படுத்த முயற்சித்து இருக்கிறார் Editor பிரபாகர். காதல் காட்சிகள் உட்பட அணைத்து காட்சிகளும் கோர்வையில்லாமல் நகர்கிறது.

– பாடல்கள் & இசை – பாடல்களும் அவற்றை படமாக்கிய விதமும் வெறும் திரை  சம்ப்ரதாயம் போலவே தோன்றுகிறது. பின்னணி இசையில் பெரிதாக video Game சாயல்.

– இரண்டாம்பாதி – இடைவேளைவரை உருவான கருவையும் கதையையும் மொத்தமாக திசைமாற்றி இருக்கிறது இரண்டாம்பாதி. நிதின்சத்யா, கருணாஸ் போன்ற கதாபாத்திரங்கள் சரியாக முடிக்கப்படாமல் மறைவது, படத்திற்கு பெரும் பலவீனம்.

சுமாரான உடல்வாகு கொண்ட கிருஷ்ணா, Six Pack வில்லன்களை பந்தாடுவதை எளிதில் நம்பமுடியவில்லை, பாடல்களில் dull’அடிக்கும் கிருஷ்ணா, நடிப்பில் அதை ஈடுகட்ட முயற்சித்து இருக்கிறார். பிளாக் பாண்டியின் காமெடி செயற்கை. சரவணனின் நடிப்பு நன்று. முதலில் எதிர்பார்க்கவைத்து, பின்னர் ஏமாற்றுகிறார் நிதின்சத்யா, வழக்கமான வில்லன் மதுசூதன ராவ். தமிழ்சினிமாவின் மற்றொரு லூசு ஹீரோயின் ஆனந்தி.

– 200% தெளிவாகவும், தைரியமாகவும் போலீசை சந்திக்கும் கருணாஸ், ஏன் நடுவிலேயே தப்பிச்சி ஓடணும்?.

– பல முறை ஏமாந்த சரவணன், நிதின்சத்யா சொல்வதை தட்டாம நம்புறது, நம்பமுடியல.

– இரண்டாம் பாதி, Double Action வில்லனோட நோக்கத்த இன்னும் தெளிவா விளக்கி இருக்கலாம்.

– கிளைமாக்ஸ்ல அவ்ளோ வீட்டு பத்திரத்ததையும் எடுத்துட்டு போற ஹீரோ அத என்ன பண்ண போறாரு?.

இறுதியில் இப்படி பல விளக்கங்கள் தேவைப்படுகிறது. இயக்குனர் பெரோஸ் திரைக்கதைலையும் படமாக்கள்லையும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் : ஒரு சில இடங்களை தவிர, இந்த பண்டிகையை  பெரிதாக கொண்டாட காரணங்கள் தென்படவில்லை.

RATING : 2.25 /5 . . .

 

Santhosh.A.V.K

Share