ஜெமினிகணேசனும்சுருளிராஜனும் – படம் எப்படி ?

ஜெமினிகணேசனும்சுருளிராஜனும் – படம் எப்படி ?

ஜெமினிகணேசனும்சுருளிராஜனும் (2017) . . .

இயக்கம் : ஓடம். இளவரசு

நடிப்பு  : அதர்வா

                  சூரி

                  ரெஜினா

                  ப்ரணிதா

                  ஐஸ்வர்யா

                  அதிதி

                  மொட்டை ராஜேந்திரன்

                  T.சிவா

இசை  : D.இமான் 

ஒளிப்பதிவு : ஸ்ரீ சரவணன்

படத்தொகுப்பு : பிரவீன். K.L

தயாரிப்பு : T.சிவா

நீளம் : 131 min (2 மணி 11 நிமிடம்)

 

கதைச்சுருக்கம் : ஆட்டோகிராப் மெதப்புல, பழைய காதலிகள பாத்து கல்யாண பத்திரிக்கை கொடுக்க மதுரைக்கு வர்ற ஹீரோ, பரோட்டா சூரி கூட சேந்து, ஒரு நாள் முழுக்க ஊர சுத்திக்கிட்டே, பிளாஷ்பேக்க அசைபோடுறதுதான் மொத்த படமும்

மதுரை, மெட்ராஸ், ஊட்டி ன்னு போகுற இந்த 131 நிமிஷ திரைஓட்டத்துல, 50 நிமிஷம் மட்டுமே ஓடுற முதல்பாதில 80’s ஸ்டைல்ல 2 ஹீரோயினோட கதை, அடுத்த 80 நிமிஷத்துல மிச்சம் இருக்குற 2 ஹீரோயினோட கதை, பின் வருது பஸ்ஸ்டாண்ட் கிளைமாக்ஸ்.

 

பலம் . . .

+இசை – டைட்டில் கார்டுல வர்ற violin மியூசிக் தொடங்கி, பல சுமாரான இடத்த கூட BGM’ல தூக்கி விட்டுடுறாரு D. இமான். அம்முக்குட்டி, ஆஹா ஆஹா’ன்னு 2 பாட்டும் கேக்க சுகமா இருக்கு.

 

+ஒளிப்பதிவு  – சும்மா திருவிழா கணக்கா frame’ல ஹோலி கொண்டாடி இருக்காரு ஸ்ரீ சரவணன். சில இடங்கள்ல ADD பிலிம் தோணில தென்பட்டாலும், பல இடங்கள்ல குளுமை.

 

+கிளைமாக்ஸ் – கடைசீ 15 நிமிட ஐஸ்வர்யா சார்ந்த காட்சிகளும், கிளைமாக்ஸ் காமெடி காட்சிகளும் படத்திற்கு பெரிய பலம்.

 

பலவீனம் . . .

 

– முதல்பாதி – 80 பாணி க்ளிஷே காட்சிகள், நகைச்சுவை வறண்ட வசனங்கள், பெரிதும் பழக்கப்பட்ட காதல் காட்சிகள்ன்னு கொசுறு நேரமே ஓடுற முதல்பாதி படு சுமார்.

 

– சூரி – கிளைமாக்ஸ் சரோஜா காமெடிய தவற பல இடங்கள்ல சூரியோட காமெடி வேலைக்கு ஆகலை. இடையில வர்ற கொஞ்சம் சிரிப்பு சத்தம் கூட சம்பிரதாயமே.

 

– ஹீரோயின் கதாபாத்திரங்கள் – மேக்கப் போட்டுட்டே இருக்குற ரெஜினா, ஹீரோ பிச்சைக்காரனுக்கு உதவி செய்றத பாத்துட்டு காதல்ல விழற ஐஸ்வர்யா, ப்ரணிதா’ன்னு, 80’s வாசனை தூக்கல்.

சிட்டி, டவுன், ஊராட்சி, நகராட்சி’ன்னு எல்லா location’லையும் தலா ஒரு playboy படத்துல நடிச்ச SJ சூர்யா, அவருக்கே போர் அடிச்சி விட்டுட்டு போன இடத்த, STR, விஷாலோட சேந்து, இப்போ அதர்வா’வும் நிரப்ப try பண்ணி இருக்காரு. அவரும் படத்துல, எவ்ளோதான் #நாகிர்தானா reaction கொடுத்தாலும், பிஞ்சு மூஞ்சின்னு பட்டுன்னு தெரிஞ்சிடுது. பரோட்டா சூரிக்கு இதுல குணச்சித்திர கதாபாத்திரம் (காமெடி வேலைக்கு ஆகலைன்னா அப்படித்தான் சொல்வோம்). ரெண்டுபேரும் ராஜேஷ் பட பாணியில முதல்பாதி முழுக்க பேசியே கொல்றாங்க. மொட்ட_ராஜேந்திரன சமீபத்திய படங்கள்ல வெறும் sidedish ஊறுகாவா வந்துட்டு போய்டுறாரு. அதர்வாவுக்கு அப்பாவா வர்ற அம்மா creations சிவா, படம் முழுக்க கைத்தட்டு வாங்குறாரு. பெரு சொல்ற மாதிரி ஒரு கேரக்டர், அத நல்லாவும் பண்ணி இருக்காரு.

5 ஹீரோயின் 5 பாட்டு 1 fight’ன்னு பக்கவா இளசுகள கவர களமிறங்கி இருக்காரு, இயக்குனர் இளவரசு. அதுக்காக சோகமே வராத இடத்தில்கூட, கட்டாயப்படுத்தி டாஸ்மாக் பாட்ட புகுத்துறதேல்லாம் அபத்தம். சில சமயங்களில், கதை நகராமல் ஒரே இடத்தில சுற்றும் தருவாயில் குறுகிய பட்ஜெட்டை நினைவுக்கு வருகிறது.

எவ்வளவு குறைகள் சொன்னாலும், ஐஸ்வர்யா வர்ற கடைசீ 15 நிமிட காட்சிகள் பெரிய ஆறுதல். கிளைமாக்ஸ் காமெடி கொஞ்சம் workout ஆனதனால, ஆபரேட்டர் படத்த நிப்பாட்டுற வரைக்கும் இருந்து பாத்துட்டு போகுது ஜனம்.

 

மொத்தத்துல : முதல்ல ஏற்படுற சில காமெடி எரிச்சல்கள, பிற்பகுதில காமெடிய வெச்சே மருந்து போட முயற்சித்திருக்கிறார் இந்த ஜெமினிகணேசன்.

Rating : 2.25 / 5 ….

பி.கு… மாடர்ன் சிகரெட் lighter, holder எல்லாத்தையும் காமிச்சிட்டு, கீழ Smoking kills’ன்னு போடுறதெல்லாம், அய்யாமுண்டி ஆட்டம்.

Share