தொண்டன் படம் எப்படி ?

தொண்டன் படம் எப்படி ?

வாழு வாழவிடு என்ற கொள்கையோடு வாழ்ந்துவருபவனை சீண்டினால் அது எந்த சக்தியாக இருந்தாலும் தகர்க்கப்பட்டுவிடும் என சொல்கிறான் தொண்டன்…
கதை :
ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டுவதை ஒரு சேவையாக செய்து வருகிறார் சமுத்திரக்கனி. வில்லன் கொல்ல வேண்டிய எதிரி ஒருவரை காப்பாற்றுவதன் மூலம் இருவருக்கும் பகை முளைக்கிறது. ஒருதலைக்காதல் பிரச்சனையில் பெண்களால் வில்லனின் தம்பி அடிபட்டுவிட, ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று பாதி வழியில் இறந்துபோனது தெறிகிறது. இதற்கு காரணம் கனி தான் என நினைக்கும் வில்லன் கும்பல் அவரை பழி வாங்க துடிக்கிறது. வில்லனிடமிருந்து தப்பித்தாரா தன் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை…
Thondan-movie-01a
நிறை :
தன் தங்கையை விக்ரந்த் ஒருதலையாய் காதலிப்பது தெரிந்தும் அவன் PRIVACY புரிந்து காத்திருப்பது
ஒருதலை காதல் தோல்வியில் சிக்கிய விக்ரந்தை மீட்பது
”ஆசிட் அடிப்போம்டா” என ஏத்தி விடும் நண்பர்களை களை எடுப்பது
வில்லனால் பாதிக்கப்பட்டும் அகிம்சை வழியில் பழிவாங்குவது
என சமுத்திரக்கனி வரும் சீன்கள் கிட்டத்தட்ட படம் முழுக்க ஒரு பாடமாகவே விஷுவல் செய்யப்பட்டிருக்கிறது.
ஜாதி ஓட்டாலும், அரசியல் நரிகளாலும் நாடு எத்தனை விசயங்களை (முக்கியமாக அழிந்த காளை இனங்களை) இழந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டும் சீன் ஆகச்சிறந்த உதாரணம்.
மனைவியாக சுனைனா. காதலிக்க போடும் திருட்டுதனத்திலும், மனைவியாகவும், கருகலைப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும், மீண்டு புது வாழ்வு தொடங்கும் சிரிப்புலும் மனதை அள்ளுகிறார். ஆனால் ஏன் இன்னும் அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கிறார் என்று தான் தெரியவில்லை.
நண்பராக விக்ரந்த். ஒரு தலைக்காதலில் முயற்சி செய்வது, கிடைக்காத காதலால் முரட்டுத்தனம் செய்வது, பின் சூழ்நிலை அறிந்து வேலைக்கு செல்வது, உயிரை காப்பாற்றி ஆனந்தம் அடைவது, ஒருவழியாக காதலில் வெற்றி அடைவது என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்வதை அவராலே கட்டுப்படுத்த முடியவில்லை…
ஆம்புலன்ஸ் நண்பனாக கஞ்சா கருப்பு, மற்றும் அப்பா படத்தின் அதே நடிகர்கள் இதில் மறு ஒளிபரப்பு. 15 பவுன் கேட்டு வரும் ஏழை மாப்பிள்ளையாக ஒரே காட்சியில் வந்தாலும் ”புரோட்டா சூரி” வெளுத்து வாங்கியிருக்கிறார்.
வில்லனின் அப்பாவாக பேராசிரியர் ஞானசம்பந்தன். பிரச்சனை செய்ய போகும் போதெல்லாம் திருக்குறள் சொல்வது. இன்கம்டேக்ஸில் சிக்கி தவிப்பது, என தன்னால் முடிந்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார்.
Thondan-movie-01b
குறை :
ஏற்கனவே பார்த்து பழகிய அதே சமுத்திரக்கனியின் சமூக பொறுப்புள்ள டெம்ப்ளேட்… ஆனால் இது மாதிரியான சமூக பொறுப்புள்ள படங்கள் தேவைப்படும் சமுதாயத்தில் தொண்டன் நிச்சயம் நிராகரிக்க முடியாத ஒரு படம்…
ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு ஏற்ற பலம். சில இடங்களில் நாடோடி REFERENCE வருவதை தவிர்க்க முடியவில்லை. விக்ரந்த் டூயட் பாடல் வேகத்தடை. படத்தொகுப்பு இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.
மொத்ததில் நம் சமுதாயமானது நாம் மாற்றி கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பிழையிருப்பின் நாமே திருகாணி கொண்டு திருத்த வேண்டும் என உறக்கச்சொல்கிறான் தொண்டன்.
மதிப்பீடு : 3/5
Share