ஒன்பதிலிருந்து பத்து வரை – படம் எப்படி?

ஒன்பதிலிருந்து பத்து வரை – படம் எப்படி?

ஹீரோ மூவிஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்து இன்று வெளியாகிருக்கும் புதிய படம் ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’.

இந்தப் படத்தில் கதிர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏறகனவே மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்வப்னா மேனன் தமிழில் அறிமுகமாகியுள்ளார். மேலும் லிவிங்ஸ்டன், அவன் இவன் ராமராஜன், சரவண சுப்பையா, இயக்குநர் ஜெகன், கிரேன் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கால் டாக்சி ஒட்டுனரான கதிர், ரேடியோ ஜாக்கியான ஸ்வப்னாவின் குரலுக்கு விசிறி… அவர் தான் என்று தெரியாமல் ஸ்வப்னாவை ஒரு ட்ரிப்காக காரில் அழைத்துச் செல்கிறார். பயணத்தின்போது, இருவரின் குணாதிசயத்திலும், பழக்க வழக்கத்திலும் முரண்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதிர் தன் விசிறி என்று ஸ்வப்னாவுக்கு தெரிகிறது. இதன்மூலம் இருவருக்கும் நட்பு அதிகரிக்க, கதிர் அதை தவறுதலாக காதல் என்று புரிந்து கொள்கிறார்.

இந்த நேரத்தில் நடந்துவரும் தொடர்கொலை விஷயமாக சிட்டி போலிஸ் கமிஷ்னர் ஹீரோவை தேடுகிறார். இந்த விஷயம் ஹீரோயினுக்கு தெரிய வர..
ஸ்வப்னா வேறு ஒருவனை திருமணம் செய்யப்போவது அறியும் கதிர்
ஸ்வப்னாவின் மொத்த குடும்பத்தயே கடத்தி வைத்து மிரட்ட,

onbathilirunthu-pathu-varai

இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள், அதிர்ச்சிகளை கலந்து சொல்லும் படம்தான் ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ திரைப்படம். முடிவில் ஒரு மிகமிக அழகான முடிவு மனதை நெகிழவைக்கும். இப்படத்தின் முடிவு நம்மை சிந்திக்க வைத்து பிரம்மிப்பில் ஆழ்த்தும்.

லவ், திரில்லர், காமெடி கலந்த ஒரு கவிதையாக இருக்கும் இப்படத்தின் முன்னோட்டம்…

ஒளிப்பதிவு : ராஜரத்தினம்
படத்தொகுப்பு : ஆர்.சுதர்சன்
இசை : எம்.கார்த்திக்
கலை : ஆர்.கே.விஜயமுருகன்

Share