Get Well Soon Kishore
#GetWellSoonKishore
ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது வென்ற எடிட்டர் கிஷோர் கவலைக்கிடம்
ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் சென்னை விஜயா மருத்துவமனையில் கவலைக்கிடமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
‘ஈரம்’, ‘ஆடுகளம்’, ‘பயணம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘காஞ்சனா’, ‘பரதேசி’, ‘மதயானைக் கூட்டம்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்கலில் எடிட்டராக பணிபுரிந்தவர் கிஷோர்.
32 வயது இளம் திரைப்பட தொழில்நுட்பக் கலைஞரான இவர், தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுபவர். ‘ஆடுகளம்’ படத்தின் எடிட்டிங் பிரிவில் தேசிய விருது வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விசாரணை’ படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து வந்தபோது மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக விஜயா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
கிஷோரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் ஓர் இடத்தில் ரத்தம் கட்டியிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி செய்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் இன்னும் நினைவு திரும்பவில்லை. கோமா நிலையிலேயே இருக்கிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் பக்கத்தில் இருந்து கிஷோரை கவனித்துவருகிறார். கிஷோருக்கு விரைவில் நினைவு திரும்பி பழைய நிலைமைக்கு வரவேண்டும் என்று திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இதற்கென #GetWellSoonKishore என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பலரும் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
எழுந்து வாருங்கள் கிஷோர்…













Social