அர்த்தநாரி – படம் எப்படி?

அர்த்தநாரி – படம் எப்படி?

சிறு வயதிலேயே அனாதையாகும் கதையின் நாயகன் “ராம்”, நாசரின் ஆதரவு இல்லத்தின் மூலம் வளர்கிறார்.

 

தனக்கு பெண் பார்க்க செல்லும் நேரம் போலீஸ் அதிகாரியான அருந்ததியின் பிழையால் தவறி சிக்கிக்கொள்ள, பெண் கிடைக்காமல் போகிறது. இதனால் நியாயம் கேட்க அருந்ததியிடம் செல்ல, அவர் மீதே காதல் வயப்படுகிறார்.

 

இன்னொரு பக்கம் நாசர் இறந்து போக, அது திட்டமிட்ட கொலை என தெரியவருகிறது. இதற்கான பிண்னனி யார், எதற்காக கொலை செய்தார்கள் என்பது மீதிக்கதை…

 

டைரக்டர் பாலாவிடம் உதவி இயக்குனரான “சுந்தர இளங்கோவன்”, இந்த படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியுள்ளார்.

 

காவல் துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் ஒரு வழக்கை துப்பறியும் பெண் போலீஸ் அதிகாரியாக களம் இறங்கியிருக்கும் அருந்ததிக்கு பாரட்டுக்கள்.

 

மேலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முத்துராமன், சுதாகர், ராஜேந்திரநாத், சம்பத் ராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.

arthanari-review

 

கிருத்திகா பிலிம் கிரியேஷன் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ”முத்தமிழ்” இந்தப் படத்திற்கு கதையெழுதி தயாரிக்கிறார்.

 

கபிலன் பாடல் எழுத, செல்வ கணேஷ் இசையமைத்துள்ளார்.”

 

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் சோக முடிவை மையமாக வைத்து இந்தபடம் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

 

Share