மாதவன் நடிப்பில் சார்லியை ரிமேக்குகிறார் விஜய்

மாதவன் நடிப்பில் சார்லியை ரிமேக்குகிறார் விஜய்

ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் வெறும் கைத்தட்டல்களோடு சென்று விடக்கூடாது. அப்படி சென்றால் அந்த திரைப்படம் அவர்களின் மனதை தொடவில்லை என்று அர்த்தம். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சார்லி’ திரைப்படம், திரையரங்கிற்கு வந்த ஒவ்வொருவரின் மனதிலும் அன்பையும், வாழ்க்கையின் அருமையையும் விதைத்திருக்கிறது.

படம் பார்க்க வந்த பார்வையாளர்கள், திரைப்பட விமர்சகர்கள் மற்றும் அனைவரும் வாழ்க்கையின் அழகை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர், என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஓர் அழகிய திரைப்படத்தை தமிழில் இயக்க, ஹிந்தி திரையுலகில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான பிரமோத் பில்ம்ஸ் முடிவு செய்துள்ளது.

உலக அளவில் புகழ் பெற்ற படங்களான ‘லவ் இன் டோக்யோ’, ‘ஜுகுனு’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தது பிரமோத் filmsதான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மதராசப்பட்டினம்’ தொடங்கி தற்போது இயக்கி கொண்டிருக்கும் ‘தேவி’ திரைப்படம்வரை, முழுக்க முழுக்க தனித்துவத்தை கையாண்டு, ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய முந்தைய படத்தின் சாயல் இல்லாமல் இயக்கும் வித்தையை கற்றிருக்கும் இயக்குநர் விஜய் தற்போது ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக் இயக்குவது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானளவு அதிகரித்துள்ளது.

தற்போது பிரபுதேவா – தமன்னா – சோனு சூட் நடிப்பில், மூன்று மொழிகளில் தயாராகி கொண்டிருக்கும் ‘தேவி’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் இயக்குநர் விஜய். அதனை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் காதல், அதிரடி மற்றும் திகில் கலந்த படத்தை இயக்கும் விஜய், நவம்பர் 15-ம் தேதி இந்த ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இறங்குகிறார்.

“சார்லி” திரைப்படத்தை முதல் முதலில் பார்த்த அடுத்த கனமே, அதன் கதையும், படத்தில் தோன்றிய கதாப்பாதிரங்களும் என் மனதை ஆழமாக பாதித்து விட்டது. மறு நிமிடமே இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று எங்களின் தயாரிப்பாளர் பிரகீத்திடம் கூற, அவரும் மிகுந்த உற்சாகத்துடன் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டார்.

இப்படிப்பட்ட ஒரு அழகிய கதைக் களத்தை எதார்த்தமாக தமிழில் இயக்கக் கூடிய ஒரே இயக்குநர் விஜய்தான். அதேபோல் மாதவனால் மட்டும்தான் இது போன்ற மனதை கவரக் கூடிய கதாப்பாத்திரங்களை கனகத்சிதமாக நடிக்க முடியும். இவர்கள் இருவரும்தான் எங்களின் வலுவான தூண்கள். நிச்சயம் இவர்களது கூட்டணி தமிழ் ரசிகர்கள் இடையே அதிக பாராட்டுகளை பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கதைக்கு ஏற்ற கதாநாயகியை தேடி கொண்டிருக்கிறோம்” என்கிறார் பிரமோத் பிலிம்ஸின் இணை தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா.

மற்ற நடிக நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நவம்பர் 15-ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share