
K.S. ரவிக்குமார் இயக்கும் ‘முடிஞ்சா இவன புடி’ ஜூலையில் வெளியாகிறது
ராம்பாபு புரோடெக்ஷன்ஸ் சார்பில் எம்.பி.ராம்பாபு தயாரிக்கும் திரைப்படம் ‘முடிஞ்சா இவன புடி.’ கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் கதாநயாகனாக நடிக்கிறார்.
இவர் தமிழில் ஏற்கனவே ‘நான் ஈ’ , ‘புலி’ போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுதீப் நேரடியாக கதாநாயகனாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது.
இப்படத்தில் நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். ‘போக்கிரி’ , ‘பூஜை’ படங்களில் நடித்த முகேஷ் திவாரி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘பாண்டிய நாடு’ படங்களில் நடித்த சரத் லோகித்சுவா மற்றொரு வில்லனாக நடிக்கிறார்.
மற்றும் நாசர், சாய் ரவி, அச்சுதா குமார், லதாராவ், சிக்கின்னா, சதீஷ், சது கோகிலா, கௌதமி, விச்சு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாத இறுதியில் இப்படத்தின் பாடல்கள் வெளிவரும். ஜூலை மாதத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ திரைப்படத்தை வெளிக்கொண்டுவர வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Social