‘உன்னோடு கா’ படம் எப்படி?

‘உன்னோடு கா’ படம் எப்படி?

அபிராமி மெகா மால் நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில் ஆர்.கே இயக்கத்தில், ஆரி, மாயா, பிரபு, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள முழுநிள நகைச்சுவை படம் தான் ‘உன்னோடு கா’.

இந்த படத்தின் கதை என்ன? பக்கத்து பக்கத்து வீட்டில் இருக்கும் இணை பிரியாத நண்பர்கள் ஜெயவேல் (பிரபு) கீர்த்திவாசன் (கை தென்னவன்). ஜெயவேல் மகன் சிவா (ஆரி), கீர்த்திவாசன் மகள் அபி (மாயா). இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பது இரு குடும்பத்தின் விருப்பம் ஆனால் சண்டை கோழியான சிவா, அபி இருவரும் இணைந்தார்களா என்பதே படத்தின் மைய ஓட்டம்.

சிவாவின் நண்பன் பகத்சிங் (பாலசரவணன்) மாயாவின் தோழி சுந்தராம்பாள் (மிஷாகோஷல்). காதல் ஜோடிகளான பகத் சுந்தராம்பாளை சேர்த்துவைப்பதற்க்கு பதில் பிரிய காரணமாகிறார்கள் சிவா-அபி. இதற்கிடையே ஜெயவேலை கொலை செய்ய கிராமத்தில் இருந்து கீர்த்திவாசனுடைய பங்காளிகள் வருகின்றனர். கீர்த்திவாசனை கொலை செய்ய அதே கோபத்துடன் ஜெயவேலின் பங்காளிகளும் இருக்கின்றனர்.

கிராமத்தில் உள்ள இருவர் குடும்பமும் தீராத பகையிலிருக்க இவர்களோ நண்பார்களாக சென்னையில் இருக்கிறார்கள். ஏன்? இவர்களை கொல்ல வருகிறார்கள்., இரு குடும்பத்துக்கும் அப்படி என்ன தான் பகை. ?.

நாம் அப்படி என்ன பகையாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருக்க.. அந்த பகையை நகைச்சுவையாக கடந்திருக்கிறார்கள், சிவலிங்கபுரம் என்ற கிராமத்தில் ஒரு கோழியிட்ட முட்டை யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை கிளம்ப, இரு குடும்பத்தினர்களின் உறவினர்களும் அடித்துக்கொள்ள.. அந்த பகை 5 தலைமுறைகளுக்கு என்ன காரணத்துகாக சண்டையிடுகிறோம் என்று தெரியாமலேயே தொடர்கிறது.

இதற்கிடையில் பகத் காதலை ஒன்று சேர்க்க முயலும் சிவா எதிர்பாராதவிதமாக பகத்தின் காதலி சுந்தராம்பாளை திருமணம் செய்துக்கொள்ள நிச்சயம் செய்யப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற அபி அதே நாளில் தனது திருமணமும் நடைபெற வேண்டும் என்று அவசரகதியில் புரூஸ்லியை (நாராயண்) நிச்சயம் செய்கிறாள். திருமண நாளும் வருகிறது… இரு குடும்பத்துக்குமான பகை தீர்ந்ததா.. சிவா-அபி திருமணம் நடைபெற்றதா விடை ‘உன்னோடு கா’ படத்தில்.

படத்தின் முக்கியமான அம்சம் ஒளிப்பதிவு. சக்திசரவணன் கைவண்ணத்தில் ஒவ்வொரு ப்ரேமும் ஜொலிக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் கிறுக்கா பாடல் தான் ப்ஆ.. அருமையாக இருக்கிறது. doopaadoo.com ல் வீடியோ இருக்கிறது ( https://beta.doopaadoo.com/social/share/en/27 ) பாருங்கள் அசந்து போவீர்கள். அடுத்தாக C.சத்யாவின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. பாடல்களில் கிறுக்கா, ஊதே பாடல்கள் இவ்வருடத்தின் ஹிட் லிஸ்டில் சேரும். ஊர்வசி பிரபுவின் நடிப்பும் படத்தை சுமந்துசெல்கிறது. மாயாவுக்கு நல்ல ஒரு இடம் காத்திருக்கிறது. படத்தில் குறை என்றால் அடுத்து என்ன நடக்கும் என்று சாதாராண பார்வையாளன் கூட யூகிக்க முடிந்த காட்சிகள் அதிகம். இரண்டாம் பாகம் நீளம் அதிகம்.  இரவு கல்யாண மண்டபத்தில் நடக்கும் காட்சிகளில் கத்திரி வைத்திருக்கலாம்.

‘உன்னோடு கா’ நகைச்சுவை கலந்த குடும்ப படமாக இருப்பதால் 45+ மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.

Share