Actor Vijay Release ‘Pencil’ Teaser

Actor Vijay Release ‘Pencil’ Teaser

நடிகர் விஜய் வெளியிடும் ‘பென்சில்’ திரைப்படத்தின் டீசர்

டார்லிங் படத்தின் வெற்றியினை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘பென்சில்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.

இவர்களுடன் ஊர்வசி, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தபடத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். மணி நாகராஜ் இயக்கியிருக்கிறார். பள்ளியில் நடக்கின்ற காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவனாக நடிக்கிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் டிவீட்டர் இணையதளம் மூலம் நடிகர் விஜய் டீசரை வெளியிடவுள்ளார். பென்சில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை காலை நடைபெற இருக்கின்றது.

Share