நீதிமன்றம் போகிறார் உதயநிதி !

ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் படங்களுக்கோ அல்லது வினியோகிக்கும் படங்ளுக்கோ தமிழக அரசால் வழங்கப்படும் கேளிக்கை வரிவிலக்கு ஏதேனும் ஒரு காரணம் சொல்லி மறுக்கப்பட்டு வருகின்றது.

குடும்ப படங்கள் எடுக்கும் சீனு ராமசாமி இயக்கிய நீர் பறவை படத்துக்கே ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு என்பதால் வரிவிலக்கு மறுக்கப்பட்டது. தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வரும் உதயநிதி, தற்பொழுது பொங்கலுக்கு தான் நடித்து தயாரித்த கெத்து படத்துக்கும் வரி விலக்கு அளிக்கப்படவில்லை என்று தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் கடுமையாக குற்றம் சாட்டிவருகிறார்.

கெத்து என்பது தமிழ் வார்த்தை இல்லை ஆதனால் தான் வரிவிலக்கு கிடையாது என்பது குழுவினரின் வாதம், ஆனால் உதயநிதியோ கெத்து என்பது தமிழ் அகராதியில் உள்ளது என்றும் அதற்கான ஆதாரத்தையும் பட்டியலிடுகிறார்.

அவர் விரைவில் இது சம்மந்தமாக நிதிமன்றத்தை நாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

gethu-1 gethu-2 gethu-3

Share