வேதாளம் தந்த வெற்றி…! மீண்டும் படம் இயக்குகிறார் A.M.ரத்னம் மகன்

வேதாளம் தந்த வெற்றி…! மீண்டும் படம் இயக்குகிறார் A.M.ரத்னம் மகன்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் A.M.ரத்னம் மகன் ஜோதிகிருஷ்ணா எனக்கு 20 உனக்கு 18, கேடி, படத்தை இயக்கினார். ஊ ல ல லா என்ற படத்தின் மூலம் நடிக்கவும் செய்தார். த்ரிஷா, இலியானா, தமன்னா ஆகியோரை திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்திதும் ஜோதிகிருஷ்ணா தான். நீண்ட நாட்களாக தனது இயக்கத்தினை முட்டைகட்டி வைத்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக என்னை அறிந்தால், வேதாளம் படங்களுக்கு தயாரிப்பில் உதவியாக இருந்தார். வேதாளம் தந்த வெற்றி மீண்டும் ஜோதிகிருஷ்ணாவை இயக்குனாராக களத்தில் இறக்குகிறார் A.M.ரத்னம். தெலுங்கில் முன்னணி நாயகனான கோபிசந்த் நாயகனாக கொண்டு ‘ஆக்ஸிஜன்’ திரைப்படத்தை இன்று தொடங்கியிருக்கிறார். இசைக்கு யுவன் சங்கர் ராஜா கை கோர்க்க இனிதே படப்பிடிப்பு தொடங்கியது.

Share