பிரபலங்கள் ரசித்த ‘பாஜிராவ் மஸ்தானி’ ப்ரிமீயர் காட்சி

பிரபலங்கள் ரசித்த ‘பாஜிராவ் மஸ்தானி’ ப்ரிமீயர் காட்சி

இந்தியின் முன்னனி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவான  ‘பாஜிராவ் மஸ்தானி’ இன்று வெளிவந்துள்ளது. இப்படத்தில் ரன்வீர் சிங், ப்ரியாங்கா சோப்ரா மற்றும் தீபிகாபடுகோனே நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்களை மட்டுமின்றி, திரை உலகினர் இடையேயும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. சத்யம் திரை வளாகத்தில் நடந்த இந்தப் படத்தின் பிரத்தியேக காட்சிக்கு பல்வேறு நட்சத்திரங்கள் உட்பட திரை உலக பிரமுகர்கள் வந்து பிரத்தியேக காட்சியை பார்த்து ரசித்தனர். வந்திருந்தவர்களை Eros நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவு துணை தலைவர் சாகர் சத்வாணி வரவேற்றார்.

Share