நிலவேம்பு குடிநீர் கசாயம் – செய்வது எப்படி?!

நிலவேம்பு குடிநீர் கசாயம் – செய்வது எப்படி?!

மழைக்காலம் தொடங்கும் போது ஃப்ளு, டெங்கு, சிக்கன் குனியா, பறவைக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது.

இது போன்ற சமயங்களில் நிலவேம்பு குடிநீர் இந்த காய்ச்சல் பாதிப்பில் இருந்த வேகமாக வெளி வர உதவுகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இந்த நிலவேம்பு பொடியானது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு, சந்தனம், சுக்கு மற்றும் பல மூலிகைகள் கலந்து செய்யப்படுகிறது.

How to make Nilavembu Kudineer Churanam

 

இந்த நிலவேம்பு குடிநீர் செய்முறையை நாம் இப்போது பார்க்கலாம்

இரண்டு டம்ளர் தண்ணீருடன் (தோராயமாக 240 மிலி) யை எடுக்கவேண்டும்

இரண்டு டீஸ்பூன் நிலவேம்பு பொடி (இந்த நிலவேம்பு பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது)

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் நிலவேம்பு பொடியை அதில் கலக்க வேண்டும்

இந்த கலவையானது அரை டம்ளர் அளவு வரும் வரை நன்றாக சுண்டவிடவும்.

கொதிநிலையை எட்டியவுடன்,
வடிக்கட்டி கொண்டு வடிக்கட்டினால்

நிலவேம்பு குடிநீர் ரெடி.

ஒரு நாளில் இரண்டு வேளை உணவிற்கு முன்பு
குழந்தைகளுக்கு 30 மிலி அளவும்
பெரியவர்களுக்கு 60 மிலி அளவும் குடிக்கவேண்டும்

காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரையின் படி நாள்தோறும் குடிக்கவேண்டும் காய்ச்சல் அல்லாதவர்கள் மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் குடித்தால் உங்களை காய்ச்சல் அவ்வளவு சீக்கிரத்தில் அண்டாது

காய்ச்சல் மட்டுமல்லாது
குடல் பூச்சியை நீக்கும்,
பித்த அதிகரிப்பைக் குறைக்கும்,
சர்க்கரை வியாதிக்கு உகந்தது,
அதிர்ச்சியால் உண்டாகும் மயக்கம் தீரும்,
செரிமான கோளாறுகள் நீங்கும்,
குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப் பொருமல் நீங்கும்,
தைராய்டு பாதிப்புகள் குறைய உதவும்,
பெண்களுக்கு உண்டாகும் சூதகக் கட்டி, கர்ப்பக்கட்டி தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்க உதவும்.

 

Share