மூத்த சினிமா பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் நன்கொடை

மூத்த சினிமா பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் நன்கொடை

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா கடந்த 2ம் தேதி சென்னையில் நடந்தது. இவ் விழாவில் மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் திரு. பேசும் படம் சம்பத் குமார், திரு. பொம்மை சாரதி, திரு. நாகை தருமன், திரு. ஃபிலிம்நியூஸ் ஆனந்தன், திரு. ராண்டார்கை ஆகியோருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருதினை சங்கத்தின் சார்பில் கமல்ஹாசனும், நடிகர் சிவகுமாரும் இணைந்து வழங்கினார்கள். அந்த ஐந்து மூத்த சினிமா பத்திரிகையாளர்களுக்கும் கமல்ஹாசன் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார். அதோடு மட்டுமின்றி சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் மேம்பாட்டிற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார். என்று சங்கத்தின் தலைவர் திரு. மேஜர்தாசன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share