9 முறை தேசிய விருது பெற்ற பர்வீன் டிராவல்ஸ் !

9 முறை தேசிய விருது பெற்ற பர்வீன் டிராவல்ஸ் !

வாழ்க்கையே ஒரு பயணம்தான். தமிழக மக்கள் வாழ்க்கையில் பயணம் என்றால் பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்தை மறக்க முடியாது: தங்கு தடையற்ற சொகுசான சௌகர்யமான பேருந்துகள் மூலம் பர்வீன் டிராவல்ஸ் அந்தப் பயணத்தை இனிய அனுபவமாக மாற்றி வருகிற நிறுவமாகும். மக்களின் எந்த சுற்றுலா நிகழ்வையும் மகிழ்ச்சியான தருணமாக மாற்றிக் கொடுப்பவர்கள் அவர்கள். அதற்குக் காரணம் உயர்தரமான பேருந்து வசதிகள், நேர்மையான கனிவான சேவைகள், தொடர்ச்சியான திட்டமிடுதல் போன்றவையே ஆகும்.

அதனால்தான் சுற்றுலாச்சேவை இனிய போக்குவரத்து இயக்குபவர்களுக்கான நற்பெயரையும் விருதுகளையும் பெற்று வந்திருக்கிறது. பர்வீன் டிராவல்ஸ் நிறுவனம் அதிகபட்ச அந்நியச் செலாவாணி ஈட்டும் வகையில் வெளிநாட்டுப் பயணிகளையும் கவர்ந்துள்ளது. ஆண்டு தோறும் இப்படி 8லட்சம் பேர் பயணிக்கிறார்கள்.

இதன் சேவையைப் பாராட்டும் விதத்தில் பர்வீன் டிராவல்ஸுக்கு இந்திய ஜனாதிபதி மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்களால் 18.9.2015-ல் புதுடில்லியில் தேசிய சுற்றுலா விருது எனப்படும் ‘நேஷனல் டூரிஸம் அவார்டு’ வழங்கிக் கௌரவிக்கப் பட்டுள்ளது. பர்வீன் டிராவல்ஸ் சார்பாக நிறுவனத்தலைவர் ஏ.அப்சல், இயக்குநர் ஏ.ஆரிப். ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இப்படி பல இந்திய ஜனாதிபதிகளால் 9 முறை தேசிய சுற்றுலா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது ஒரு சாதனையாகும்.

“இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவே இந்தச் சந்திப்பு என்றும் மக்களின் பயணச் சேவையில் தடம்பதித்து பயணிக்க விரும்புகிறோம்” என்கிறார்கள் நிறுவனத்தலைவர் ஏ.அப்சல், இயக்குநர் ஏ.ஆரிப் . ஆகியோர் .

Share