குரங்கு கைல பூமாலை – விமர்சனம்

குரங்கு கைல பூமாலை – விமர்சனம்

ஆண்டனி ஒரு கார் ஷோரூமில் வேலை செய்கிறான். அங்கே வேலை செய்யும் லலிதாவை காதலிக்கிறான். ஆனால் அவளோ காசுக்காக காதலிப்பது போல நடிக்கிறாள். ஷோரூம் ஓனர் மகன் விஷ்ணுவை பார்த்ததும் அவனை மடக்க ஆண்டனியை ஒரு சண்டையில் மாட்டிவிட அவனது வேலை பறி போகிறது.

மற்றொருபுறம் பல பெண்களை காதலிப்பதாக ஏமாற்றும் குணமுடையவன் ராக்கி, காயத்ரி என்னும் பெண்னையும் டார்ச்சர் செய்ய ஆரம்பிக்கிறான். தோழிக்கு உதவ ராக்கியை திட்டுவதற்க்கு பதிலாக நம்பர் மாறி ஷோரூம் ஓனர் மகனான விஷ்ணுவை சராமாரியாக திட்டி விடுகிறார் கதாநாயகி கவிதா. ராக்கியை போலீஸில் மாட்டிவிடுகிறாள் கவிதா.

கவிதா தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க, அவள் போன் செய்ததால் காரில் செல்லும் போது விபத்தில் இருந்து உயிர் தப்பியதாக கூறும் விஷ்ணு நன்றி சொல்ல கவிதாவை சந்திக்க செல்லும் போது ராக்கி அவன் போனை திருடி விருகிறான். அதை வைத்து வேறு ஒருவனை விஷ்ணுவாக அனுப்புகிறான் ராக்கி. ஆனால் உண்மையான விஷ்ணு இல்லை என கவிதாவுக்கு தெரிந்து போகிறது. போன் தொலைந்ததால் விஷ்ணுவுக்கு கவிதாவை சந்திக்க முடியாமல் போகிறது.

இதற்கிடையில் ஆண்டனி தன்னை விஷ்ணு என்று கூறி கவிதாவிடம் பழக ஆரம்பிக்கிறான். கடைசியில் உண்மையான விஷ்ணுவும் கவிதாவும் சேர்ந்தார்களா, ராக்கி மற்றும் ஆண்டனியின் திட்டங்கள் என்ன ஆனது. என்பதை வெள்ளித்திரையில் காண்க.

சிறந்த திரைக்கதை அமைப்பு, கொடுக்கப்பட்ட பட்ஜெட்டுக்குள் திறமையாக இயக்கியுள்ளார் இயக்குனர் G கிருஷ்ணன்.

தயாரிப்பு – கே. அமீர் ஜான்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – ஜி. கிருஷ்ணன்
ஒளிப்பதிவு – மாயன்
படத்தொகுப்பு – சாய்சுரேஷ்
இசை – சாய் குருநாத்

Share