வந்தா மல – விமர்சனம்

வந்தா மல – விமர்சனம்

சென்னையின் குப்பத்தில் குடியிருக்கும் பொறுப்பில்லாத செயின் திருடும் நான்கு இளைஞர்களிடம் ஒரு நகை கிடைக்கிறது அதில் தன்னை காப்பாற்றி விடுபவர்களுக்கு இரண்டு கோடி தருவதாக எழுதியிருக்கிறது.

எழுதியது யார்? எழுதியவரை காப்பாற்றினார்களா? இரண்டு கோடி கிடைத்ததா என்பதே இப்படத்தின் கதை.

‘கலாப காதலன்’ படத்தை இயக்கிய இகோர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மெட்ராஸ் படங்களைப்போல வட சென்னை மக்களின் வாழ்க்கையை எளிமையாக காட்ட முயன்றிருக்கிறார். வசனங்களும் இறைச்சலான இசையும் கொஞ்சம் காதை பதம் பார்க்கத்தான் செய்கின்றது.

கதாநாயகி ஸ்ரீ பிரியங்கா படத்திற்கு அழகாக பொருந்துகிறார்.

“அன்னைக்கு உனக்கு பதிலா நான் கீழ விழுந்திருந்தா இன்னேரம் அவ எனக்கு மடிஞ்சிருப்பாடா”,  “கடைசில நம்ம பிரண்டையே சைட் அடிச்சிட்டமேடா” போன்ற சில வசனங்கள் கொஞ்சம் கிச்சுக்கிச்சு மூட்டுகின்றன.

சென்சார் கார்டு செய்யும் அலப்பரைகளுக்காக சிகரெட்டே இல்லாமல் வெறும் கையில் போலீஸ் சிகரெட் குடிப்பது போல காட்சிகள் அமைத்து அதற்கு சென்சார் கார்டு போட்டிருக்கின்றனர்.

தயாரிப்பு : எஸ்.ஜெயராதாகிருஷ்ணன் & நவகுமாரன்

ஒளிப்பதிவு : மாரி வெங்கடாச்சலம்

இசை : சாம் D ராஜ்

படத்தொகுப்பு : A.L. ரமேஷ்

Share